சென்னை, பிப். 7- மன்னார் வளைகுடா தீவுகளை ராமேசுவரத்திலிருந்து படகில் சென்று பார் வையிடும் வகையில் சூழல் சுற்றுலாத் திட்டத்தைத் தொடங்க வனத்துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.
பாம்பன் முதல் தூத் துக்குடி வரை உள்ள மன் னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இவற் றைச் சுற்றி பவளப்பாறை, டால்பின், கடல்பசு உள் பட இரண்டாயிரத்துக் கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள் வசிக் கின்றன.
இதில் ராமேசுவரத் துக்கு வெகு அருகே உள்ள குருசடைத்தீவு, புள்ளிவாசல் தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு ஆகியவற்றுக்கு படகு மூலம் செல்லலாம். அங்கு அரியவகை பவளப் பாறை கள், கடல்வாழ் உயிரினங் கள், மாங் குரோவ் காடு கள் ஆகியவற்றைப் பார் வையிடலாம்.
இதற்காக சூழல் சுற்று லாத் திட்டத்தைத் தொடங்க வனத் துறை ஏற்பாடு செய்து வருகிறது. சுற்றுலாவுக்காக இரு கண்ணாடி இழைப்படகு கள், ஒரு பெரிய படகு வாங்கப்பட்டுள்ளன. பாம்பன் குந்துகால் பகு தியிலும், குருசடை தீவி லும் படகுகள் இறங்கு தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. குந்துகாலில் இருந்து பெரிய படகில் குருசடைத் தீவுக்குப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். அங் கிருந்து மூன்று சிறிய தீவு களுக்கு கண்ணாடி இழைப் படகில் அழைத்துச் செல்லப்படுவர். படகின் அடிப் பகுதி மூலம் கடலில் உள்ள பவளப் பாறைகள், மீன்கள், கடல் பாசிகளை பார்க்க லாம். நபர் ஒருவருக்கு கட்ட ணம் ரூ.300.
ஏற்கெனவே, தொண்டி அருகே காரங்காடு அலையாத்தி காடுகள் மற்றும் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்திலிருந்து நடுக் கடலில் உருவான மணல் திட்டைப் பார்வையிட சூழல் சுற்றுலா நடத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில், 15 மீனவ இளை ஞர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் வீரர் களுக்கான ஒரு வாரப் பயிற்சி முகாம், பிரப்பன் வலசையில் அண்மையில் நடைபெற்றது.
மன்னார் வளைகுடா உயிர்க் கோள தேசிய பூங் காவில் இயக்கப் பட்டு வரும் சூழல் சுற்றுலா தலங்களான காரங்காடு சூழல் சுற்றுலா, பிச்சை மூப்பன் வலசை சூழல் சுற்றுலா மற்றும் புதிதாக மன்னார் வளைகுடா தீவு களுக்கு தொடங்க உள்ள சூழல் சுற்றுலா தலங்க ளில் இந்த 15 இளைஞர் களுக்கும் உயிர் காக்கும் நீச்சல் வீரர் பணி வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment