சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆறாவது புதிய நீர்த்தேக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆறாவது புதிய நீர்த்தேக்கம்

சென்னை, பிப். 1- சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம் பரம்பாக்கம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய 4 ஏரி கள் முக்கிய பங்கு வகிக் கிறது. 11.7 டி.எம்.சி. கொள் ளளவு கொண்ட இந்த 5 ஏரிகள் வடகிழக்கு பருவ மழை மூலம் கிடைக்கும் நீரை நம்பிதான் உள்ளது. இதை தவிர்த்து தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப் படி கிருஷ்ணா நீரும் பெறப்பட்டு வருகிறது.

இந்த நீரை கொண்டு சென்னை மாநகரின் குடி நீர் தேவையை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள் ளது. குறிப்பாக, சராசரி யாக மாதத்துக்கு 1 டிஎம் சிக்கு மேல் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது.

எனவே, சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக புதிதாக நீர்த்தேக்கம் அமைக்க வேண்டியுள்ளது.

இதற்காக, திருவள் ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுகா மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஆகிய இரண்டுஏரிகளை இணைத்து 6ஆவது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப் படுகிறது. இந்த திட்டம் நபார்டு வங்கி மூலம் ரூ.55.7 கோடி நிதியுதவி யின் கீழ் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ரூ.6.5 கோடி மாநில அரசு நிதி விடுவித்துள்ளது. அதன் படி ரூ.62.2 கோடி மதிப் பில் இப்பணிகள் நடந்து வருகிறது. இதில், ரூ.38 கோடி நீர்த்தேக்க கட்டு மான பணிக்கும், ரூ.11.7 கோடி கடல்நீர் உட்புகு தலை தடுக்க சுவரும், 15 இடங்களில் ரூ.41 லட்சம் செலவில் செயற்கை முறை யில் நிலத்தடி நீர் செறி வூட்டும் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகி றது. ரூ.3.6 கோடியில் நிலம் கையகப்படுத்தப் பட்டு பணிகள் மேற்கொள் ளப்பட்டன. தற்போது வரை 60 சதவீத பணிகள் வரை முடிந்துள்ளது.

இந்நிலையில், முதல மைச்சர் மு..ஸ்டாலின் அறிவுரையின் பேரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இப்பணி களை வேகப்படுத்த பொறியாளர்களுக்கு உத் தரவிட்டுள்ளார். அதன் படி இப்பணிகள் வேக மாக நடந்து வருகிறது. இதை சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியா ளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இப்பணிகளை வரும் ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத் தின் மூலம், 58 மில்லியன் கன அடியாக உள்ள ஏரிகளின் நீர் இருப்பு 350 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும் என்பதால், ஆரணியாற்றில் இருந்து திறக்கப்படும் 1.76 டி.எம். சி. உபரிநீர் கடலுக்கு செல் லாமல் தடுக்கப்படுகிறது. மேலும், இப்பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க முடியும். இதன் மூலம் சென்னையின் குடி நீர் பிரச்சினை தீரும்.

No comments:

Post a Comment