முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னை,
பிப். 6- நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும்
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சமூகநீதி கூட்டமைப்பில் இணையும்படி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்
அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து
தி.மு.க. அலுவலகம்
வெளியிட்ட செய்திக்குறிப்பு: தி.மு.க.
தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து கடந்த 2-ஆம் தேதி நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள்
38 பேருக்கு
கடிதம் எழுதியிருந்தார்.
இதைத்
தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அனைத்
திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், மேனாள் நீதிபதியுமான ஈஸ்வரய்யா, ஏஅய்ஓபிசி கூட்டமைப்பு பொதுச் செயலர் கோ.கருணாநிதி, பிஏஎம்சிஇஎப்
அமைப்பின் பி.டி. போர்கர்,
பிஏஜிஏஏஎம் அமைப்பின் நிறுவனர் தஜிந்திர் சிங் ஜல்லி, சாமாஜிக் சேத்னா அமைப்பின் நிறுவனரும், மேனாள் நீதிபதியுமான வீரேந்திர சிங்யாதவ், லீட் இந்தியா அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹரி எப்பனப்பள்ளி ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment