பொட்டலங்களில் உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் ஒரு சிக்கல் உண்டு. அடைக்கப்பட்ட உணவுவின் மேல் பலவகை பூஞ்சைகள் பூத்துக் கெட்டுப் போகலாம். அல்லது ஈ.கோலி போன்ற கேடு விளைவிக்கும் பாக்ட்ரியா வந்து அண்டிவிடலாம்.
இதை தடுக்க, அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், 'ஸ்மார்ட் பேக்கேஜிங்' முறையை உருவாக்கியுள்ளனர்.
இந்த முறையில், பொட்டலத்தின் உட்பரப்பிலிருந்து, நாள்படஇயற்கையான வேதிப் பொருட்கள் மெல்லக் கசியும். இவை கிருமிகளையும் பூஞ்சைகளையும் கொல்லும் திறன் கொண்டவை. எனவே, ஸ்மார்ட் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் வெகுநாட்களுக்கு பாதுகாப்போடு இருக்கும்.
No comments:
Post a Comment