வீட்டு முகவரிக்கு அஞ்சல் வாக்குகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

வீட்டு முகவரிக்கு அஞ்சல் வாக்குகள்

சென்னை, பிப். 10- சென்னை மாநக ராட்சிப் பகுதியில் தேர்தல் பணி யில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான அஞ்சல் வாக்குகள் அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக் கப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர் களிடம் கூறியது:

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தலா ஒரு வாக்கு எண்ணும் மய்யம் அமைக்கப் பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 5,794 வாக் குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை தேர்வு செய்யும் பணி தேர்தல் பார் வையாளர்கள் மற்றும் போட்டியி டும் வேட்பாளர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவித் தேர்தல் நடத்தும் அலு வலர்களுக்கு உட்பட்ட பகுதிகளுக் கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மணலியில் உள்ள மாநகராட்சி கிடங்கி லிருந்து சம்பந்தப்பட்ட விநியோக மய்யங்களுக்கு அனுப் பப்பட்டு வருகின்றன. சென்னை யில் மொத்தம் 22 இடங்களில் விநியோக மய்யங்கள் உள்ளன.

பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலை யில் நடைபெற உள்ளது. வாக்குச் சாவடி மய்யங்களில் பணிபுரிய சுமார் 27 ஆயிரம் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முடிந் துள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்களுக் கான  அஞ்சல் வாக்குகள் அவர் களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப் படும். அஞ்சல் வாக்குகளை செலுத் திய பிறகு அவற்றை  அஞ்சல் மூலமாக அல்லது சம்பந்தப் பட்ட உதவித் தேர்தல் நடத்தும் அலுவ லர்களின் அலுவலகத்தில் உள்ள சீலிடப்பட்ட பெட்டியிலே சேர்க் கலாம்.

அனைத்து வாக்கு எண்ணும் மய்யங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

சென்னையில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப் பட்டரூ.15 லட்சம் ரொக்கம், ரூ.1.25 கோடி மதிப்பிலான பொருள்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment