அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி.முகமது பசீர், கே.நவாஸ்கனி பிரதிநிதிகளாக நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி.முகமது பசீர், கே.நவாஸ்கனி பிரதிநிதிகளாக நியமனம்

சென்னை,பிப.10-  தி.மு.. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்தபடி, ‘அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புஎனும் அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். அவ்வமைப்பில் இணையுமாறு நாடு தழுவிய அளவில் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரசு கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் முயற்சிக்கு பாராட்டையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக வீரப்பமொய்லி யை சோனியாகாந்தி அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பி.கே.குஞ்ஞாலிக் குட்டி இணைந்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் அழைப் புக்கு பதில் அளித்து எழுதிய கடிதத்தில் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் .டி. முகமது பசீர், கே.நவாஸ் கனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள் ளனர்.

அந்தக் கடிதம் வருமாறு:- தமிழக முதலமைச்சர் மற்றும் திராவிட முன் னேற்ற கழகத்தின் தலைவருமாகிய  தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

தாங்கள் அறிவித்திருக்கும் சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப் பில் சேர்ந்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அழைப்பு விடுத்து எழுதிய 2022 பிப்ரவரி 2ஆம் தேதியிட்ட கடிதம் வரப்பெற்று மகிழ்ந்தோம்.

இந்தியத் திருநாட்டின் 7ஆவது குடியரசு தின விழாவின் போது, தேசிய அளவில் கூட்டாட்சித் தத்துவம் மற்றம் சமூக நீதிக் கொள்கைகள் நிலை நிறுத்தும் இலட்சியத்திற்காக, திராவிட முன்னேற்ற கழகம்சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்புஉருவாக்குவதற்கு முனைந் திருக்கிறது என்று தாங்கள் அறிவித் தீர்கள்.  இந்த அறிவிப்பை வரவேற்கும் வண்ணமாக, ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் சார்பில், காணொலி மூலம் நடந்த பாராட்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் .டி. முகமது பசீர் எம்.பி. பங்கேற்றுச் சிறப்பித்தார்.

சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி பிரதிநிதிகளாக .டி. முகமது பசீர் எம்.பி., கே.நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மகிழ்வோடு தெரிவித்துக் கொள் கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழுக் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 2022 பிப்ரவரி 14ஆம் தேதி நடக்க விருக்கிறது.

சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு சார்பில் உருவாக்கப்பட வுள்ள குறைந்தபட்ச செயல்திட்டத்தில், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் கோரும் கோரிக்கைகள் பற்றிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, தங்களின் கவனத் துக்கு அனுப்ப இருக்கிறோம்.

தாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் புதிய முயற்சி முழு வெற்றி பெற வாழ்த்துகிறோம். -இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment