சென்னை, பிப். 8- சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்கு தூக்கு வதே அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி என தொழிற் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள் ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் துவங்கவிருக்கும் அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்ட மைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக விற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம், எங்களை ஏன் அழைக்கிறீர்கள்” என்று சொல்ல 7 பக்க அறிக்கை அளித்திருப்பது வேடிக்கை கலந்த விநோதமாக இருக்கி றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து தர்மயுத்தம் என்ற நாடகத்தை நடத்தி, பின்னர் பாஜகவின் தயவில் பழனிசாமி யுடன் இணைந்து துணை முதலமைச்சர் பதவியை அனுப வித்த அவர், சமூகநீதி பற்றி யெல்லாம் கவலைப்படமாட் டார் என்பது தெரிந்ததுதான் என்றாலும் அரசியல் நாகரிகம் கருதியும் சமூகநீதி யில் தமிழ்நாட்டில் அனைவ ரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே அதிமுகவையும் அழைத்தார் முதலமைச்சர். அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையாமல் இருப்பது அதிமுகவின் விருப்பம்.
ஆனால் நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறும் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு கூடவராமல் போனது ‘ஊருக்கு உபதேசம்’என்ற பழமொ ழியை நினைவு படுத்து கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதாவை தலைவராக ஏற் றுக்கொண்டு இருந்த ஓ.பன் னீர்செல்வம் பாஜகவின் அழுத்தத்தை தாங்க முடியா மல் எப்படி பழனிசாமியையும், முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு இருந்தாரோ, அதே போல் ஒன்றிய பாஜக அரசு நீட் விதிவிலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் நிராகரித்ததை திசைதிருப்ப முதலமைச்ச ருக்கு ஏழு பக்கம் கடிதம் எழு தியிருக்கிறார் என்றே தோன்று கிறது. பாஜகவின் தயவை இப் போதும் பெறுவதற்காக முதலமைச்சரை விமர்சிக்கும் கட்டாயம் ஓ.பன்னீர்செல்வத் திற்கு ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சரை விமர்சித்தால் மட்டுமே தங்களுக்குப் பிழைப்பு என்று இருப்பவர்கள் சமூக நீதி கூட்ட மைப்பில் இணைய மாட்டோம் என்பதில் வியப் பும் இல்லை; கடிதம் எழுது வதில் புதிரும் இல்லை! ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மேனாள் அதிமுக அமைச்சர்க ளுக்கு, தங்கள் பழவினையால், சமூகநீதி சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்குத் தூக் குவதே தலையாய பணியாக இருப்பதைத்தான் அவரது அறிக்கை உணர்த்துகிறது.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment