திருவனந்தபுரம் பிப்.2 கேரளாவில் மிகவும் பிரபலமான 'மீடியா ஒன்' மலையாள செய்தி சேனல் ஒளி பரப்பு அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
மலையாள மொழி செய்தித் தொலைக்காட்சிகளில் முன்னணி ஊடகம் 'மீடியா ஒன்'. மலையாள மொழிசெய்திகளில் முன்னணியில் உள்ள ஒன்றாகும். இந்த சேனலின் ஒளிபரப்பு அனுமதியைக் கடந்த 2000 ஆம் ஆண்டு நிதி முறைகேடு என்று கூறி ஒன்றிய அரசு தடை செய்தது. கடும் போராட்டத்துக்கு பிறகு மலையாள செய்திச் சேன லான 'மீடியா ஒன்' சேனலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சேனலின் ஒளிபரப்பு அனுமதியை மீண்டும் ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இதனால் இந்த அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட பட்டியலில் உள்ள சேனல்களில் இருந்து மீடியா ஒன் டிவியின் பெயர் நீக்க ப்பட்டுள்ளது. இந்த ஒளிபரப்பு சேவை தற்போது தடை செய்யப் பட்டுள்ளது. மீடியா ஒன் சேனலில் கட்சியின் கேரள மாநிலத்தை சிறுபான்மைஇனத்தவர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். சிறு பான்மை இஸ்லாமியர்கள் பங்கு தாரர்களாக இருப்பதனாலேயே பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.; இத னால் சேனலின் அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.
சிறுபான்மையினர் பங்குதா ரர்களாக இருந்த போது நடுநிலை தவறாது செய்திகளை வழங்கி கேரளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த செய்தி நிறுவனத்தின் உரி மத்தை ரத்துசெய்ததற்கு அனைத் துத் தரப்பு மலையாள மக்களும், மாநிலத்தின் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 ஆம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டிலும் பாஜக படுதோல்வி அடைய ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கி யமாக இருந்தது,
இந்த நிலையில் இப்போ திருந்தே தங்களுக்கு எதிரான ஊடகங்களை மிரட்டிப் பணிய வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது, நாடாளுமன்ற தேர்தல் நடந்த இரண்டு ஆண்டு உள்ளது. இந்த இரண்டு ஆண்டில் தமிழ் நாடு கேரளா ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான இடங்களைப் பெற இப்போ திருந்தே தனக்கு ஆதரவான சூழலை உருவாக்க தங்களுக்கு எதிரான எழுதுபவர்கள் காட்சி ஊடகங்கள் போன்றவற்றை மிரட்டி வருகிறது.
No comments:
Post a Comment