சென்னை, பிப்.8 அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபகாலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை முழுமையாக ஆய்வு செய்யும் போது, ‘ நமது ஓட்டுநர்கள் பணியின் போது அலைபேசி பயன்படுத்துவதும் நடத்துநர்கள் பகலில் பணியில் முன் இருக்கையில் ஓட்டுநருடன் உரையாடிக் கொண்டு அமர்ந்து செல்வதாலேயே ஓட்டுனருக்கு கவனக்குறைவு ஏற்படக் காரணம் என ஆய்வில் தெரியவருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது நமது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் என்பதால் அவர்கள் நலன் கருதி கீழ்க்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
1. ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையில் மேல் பாக்கெட்டில் அலைபேசி வைத்திருத்தல் கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிந்த பிறகு பெற்றுக் கொள்ள வேண்டும்.
2. நடத்துநர் பகலில் முன் இருக்கையில் அமராமல் பேருந்தின் பின்புறம் கடைசி இடது பின் இருக்கையில் இருந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். தொலைதூர பேருந்துகளில் இரவு 11 முதல் காலை 5 மணி அளவில் முன் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர் பணிக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
3.மேலும் பணி நேரத்தில் ஓட்டுநர் அலைபேசி வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ, நடத்துநர் பகலில் முன் இருக்கையில் அமர்ந்து இருப்பது கண்டறியப்பட்டாலோ சட்ட பிரிவின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில்
கொதிகலன் குழாய் பழுது
மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர்,பிப்.8- மேட்டூரில் பழைய அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 4 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் அருகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் உள்ளது. இவைகள் மூலமாக தினசரி மொத்தம் 1,440 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கப்படும்.
இதில் கடந்த 5.2.2022 அன்றிரவு 840 மெகாவாட் பழைய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது ஏற்பட்டதால் 2ஆவது யூனிட்டில் 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment