மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்தல்
சென்னை, பிப். 10 - ``உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற நீதிபதிகள்ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று நாடா ளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற் றக் கழக உறுப்பினரும் மூத்த வழக்குரைஞ ருமான பி.வில்சன் வலியுறுத்தினார்.
இது குறித்து மாநிலங்களவையில் அவர் பேசியதாவது:-
உயர் நீதிமன்ற நீதிபதி களின் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து, 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 லிருந்து 70 ஆகவும் உயர்த்துவது தொடர்பான முக்கிய விவகாரத்தை இந்த அவை யின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நீதித் துறை என்பது நமது ஜனநாயகத்தின் அடி நாதமான தூண்களில் ஒன்றாகும்.
மேலும், அரசியலமைப் பின் இறுதி நடுவர் என்கிற வகையில், இந்த தேசத்தின் வரலாற்றை கட்டமைப்பதி லும், பாது காப்பதிலும், மிக முக்கிய பங்கு வகிக் கிறது. நாம் ஆளுங்கட்சி வரிசையில் இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், இறுதியாக நமது உரிமை களை பாது காக்க நீதித்துறையை மட் டுமே நாடுகிறோம்.
நீதித்துறையில் நிலவும் காலிப்பணியிடங்கள் மற்றும் வழக்குகளின் தேக்க நிலையை போக்கி நீதித்துறையை வலுவாக்க நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டிய சரியான தருணம் இது என்பது அனைத்துக் கட்சிகள் மற்றும் உறுப்பினர் களின் ஒருமித்த கருத் தாகும்.
நீதித்துறை என்பது வலுவானதாக இருக்க வேண்டும் என்பதே நம் அனை வரின் தேவையாகும். 1963ஆம் ஆண்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை நாம் உயர்த்த வில்லை. அதி நவீன தொழில் நுட்பம் மற்றும் மருத்துவத்தில் ஏற்பட் டுள்ள முன்னேற்றம் காரணமாக, நாம முன்னெப்போதையும் விட ஆரோக்கிய மாக இருக்கிறோம். மேலும் எழுபது, எண்பது வயதுகளில் கூட நன்றாகச் செயல்பட முடிகிறது.
நமது இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 90 வயதில் இருக்கிறார். மேலும், அவர் மிகவும் திறமையானவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்! உயர்நீதிமன்ற நீதி பதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று பல நிலைக் குழுக்களின் அறிக்கைகள் தொ டர்ந்து பரிந்துரைத்திருக்கின்றன. ஆனால், இந்த குழுக்களின் அறிக் கைகள் கூட அரசாங்கத் தால் விவாதிக் கப்படாத நிலையில், பின்னர் குழுவின் பரிந்துரை யால் என்ன பயன் ? இந்த நிலைக்குழு க்களுக்காக நாம் அதிகப் படியான நிதியை செலவிடுவதோடு மட்டுமின்றி, நமது உறுப்பினர்கள் இந்த கூட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும், அறிக்கை களைத் தயாரிப்பதற்காக வும் தங்களின் பொன்னான நேரத்தை செலவிடுகி றார்கள்.
ஆனால் ஏன் இந்த அரசாங்கம் அவர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்ய மறுக்கிறது. மாநிலங்களவையின் நெறி முறைகள் மற்றும் நடத்தை விதி களின் விதி 277இன் படி, நிலைக்குழுக் களின் அறிக்கைகள் மதிப்பு மிக்கது மற்றும் குழுவால் வழங்கப்பட்ட ஆலோ சனையாகக் கருதப்படும். எனவே, இந்த அவையால் அறிக்கைகள் ஏற்றுக் கொள் ளப்படும் நிலையில், அரசாங்கத்தைக் கட்டுப்படுத் தும் பரிந் துரைகளை செய்ய இந்த விதியை திருத்த வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். எனவே, இது குறித்து ஆலோசிக்குமாறு இந்த அவையை நமது அவைத் தலைவர் வாயிலாக நான் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த மசோதா தொடர்பாக அதிகார வர்க்கத்தினரிடம் சில தயக் கங்கள் உள்ளது என்பதை புரிந்து கொள் கிறேன்.
ஆனால், சிறந்த சட்ட வல்லுநர் களாகவும், அரசியலமைப்பு பதவியை வகிப்பவர்களாகவும் உள்ள நீதிபதிகளை அதிகார வர்க்கத்தினருடன் ஒப்பிடக் கூடாது.
மேலும், நீதிமன்ற பணிச்சுமைகளுக்கு இணையான, பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாகப் பதவி வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தகுதியானவர்கள் என்று நாம் கருதும் போது, வழக்குகளை தீர்ப்பதற்கும், விரை வான நீதி வழங்குவதற்கும் அவர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் வகையில், நீதிமன்றங்களிலேயே அவர் களை ஏன் தொடர செய்யக்கூடாது?
எனவே, இதனை கட்சி சார்பற்ற பிரச்சினையாகக் கருதி, நம்முடைய பொதுவான இலக்காகக் கொண்டு, நீதித்துறையை வலுப்படுத்துமாறு இந்த அவையின் வாயிலாக சட்ட அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பி.வில்சன் அவர்கள் வலியுறுத்திப் பேசினார்.
No comments:
Post a Comment