காந்தியாரின் நினைவு நாளில் (30.1.2022) மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஹிந்து மகாசபையினர் காந்தியாரைப் படுகொலை செய்த கோட்சே ஆப்தே பெயரால் 'பாரத ரத்னா' விருது கொடுப்பதும், (குடியரசுத் தலைவ ரையும்,அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பு ஆகாதா?) அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று ஹிந்து மகாசபையினர் குரல் கொடுப்பதும், அண்டை நாடுகளுடன் வீண் வம்பு வளர்ப் பதும், சட்ட விரோதமும், அல்லவா! உலக நாடு களின் கவனத்துக்கும் சென்று இந்தியாமீது கடுமையான விமர்சனங்களும், பிரச்சினைகளும் உருவாவதற்கான ஆபத்தான செயல்பாடுகள் அல்லவா!
இதன்மீது சம்பந்தப்பட்ட மாநில அரசும், ஒன்றிய அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பது எதைக் காட்டுகிறது?
இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டும் நோக்கத் தோடும், சட்ட விரோத செயல்பாடுகளுக்குக் காரண மானவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார் (31.1.2022).
கழகத் தோழர்களே, செயல்படுங்கள். ஒத்த கருத் துள்ளவர்களையும் அணுகுங்கள் - இணையுங்கள். 5.2.2022 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் - காவல்துறைக்கு இன்றே எழுதிக் கொடுக்கவும். அமைதியுடன், கழகத்திற்கே உரித்தான கட்டுப்பாட்டுடன் இந்த முக்கியமான ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கேட்டுக் கொள் கிறோம்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
1.2.2022
No comments:
Post a Comment