டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாட்டின் ஜனநாயகம் மேலும் வலுப் பெறும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட நீட் விலக்கு தொடர்பான சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 மாதத்துக்குப் பிறகு திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிப்ரவரி 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
பாஜகவும் அதன் சிந்தனைகளும் நாட்டிற்கு மிகப் பெரிய ஆபத்து என ராகுல் காந்தி ராய்பூரில் பேச்சு.
மோடி அரசு வரலாற்றை திரிபுவாதம் செய்கிறது. நடப்புகளில் நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறது பாஜக என திரிணாமுல் காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மகுவா மொயித்ரா மக்களவையில் பேச்சு.
தி டெலிகிராப்:
மோடி அரசு கூட்டாட்சிக்கு எதிரானது என பிஜு ஜனதா தளம் மற்றும் டி.ஆர்.எஸ். கட்சி கண்டனம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment