விழுப்புரம், கல்லக் குறிச்சி, கடலூர் மாவட்டங் களின் பல கிராமப் பகுதி களையும் சேர்ந்த இளை ஞர்களை அழைத்து குடிமைத் தேர்வுகளுக்குப் பயிற்சி தரும் பெரியாரிஸ்ட் தோழர் சிவராஜ் அவர்களது சீரிய முயற்சியால், பல கிராமப் பிள்ளைகள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கப்பூரில், 'புதிய சிறகுகள்' என்ற பெயருடன் இயங்கும் அந்த நிறுவனத்தில் பயிற்சி பெறும் நமது இளைஞர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று (1.2.2022) உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்புபற்றிய கூட்டத்தின் தொடக்கத்திலும், கருப்புச் சட்டையுடன் பெரியார் பொன்மொழிகளைக் கூறி, நம்மிடம் அறிமுகமான நிகழ்ச்சி எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அதற்கு முன்பு 30.1.2022 அன்று நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றுப் பயன்பெற்றனர். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனின் தொடர்பு - முயற்சி, தோழர் சிவராஜ் அவர்களது அரிய உழைப்புக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டும்!
இளைஞர்களே, பெரியாரை நோக்கி அணி அணியாக வாருங்கள்!
அதுதான் உங்களுக்கு மானத்தையும், அறிவையும் தரும் ஒரே வழி!
வருக! வரவேற்கிறோம்!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.2.2022
No comments:
Post a Comment