நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சுவர் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சுவர் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை

சென்னை, பிப். 10- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சுவர்களில் தேர்தல் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள் ளது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடை பெற வுள்ளது. இதையொட்டி பொது இடங் களில் வேட்பா ளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர் பான பதாகைகளை வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின் னங்களை வரைதல், சுவரொட் டிகளை ஒட்டுதல் போன்ற வற்றை மேற்கொள் ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறை களை வேட்பாளர்கள், அர சியல் கட்சியினர் பின்பற்ற உத்தரவிடப்படு கிறது.

அதனடிப்படையில், எந்த வொரு அரசு வளாகத்தின் சுவர்களிலும் சின்னங் களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல், கட்-அவுட் கள், விளம்பர பலகைகள், பதாகை கள், கொடிகள் போன்றவற்றை வைப்பதற்கு அனுமதி கிடை யாது. பொது இடங்கள் என்பது ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது குறிப்பிட்ட இடத்தை கடந்து செல்லும் போது பொதுமக் களின் பார்வையில் படும் தனியார் இடம், கட்டடம் ஆகும்.

இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதி பெறப்பட்டிருந்தாலும் சுவர் விளம்பரம் செய்வது, சுவ ரொட்டி ஒட்டுவது போன்ற வற்றை மேற்கொள்ளக் கூடாது. இடத்தின் உரிமை யாளர் சம்மதம் பெறப்பட்டு இருந் தாலும் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்பட மாட் டாது. இதனை தேர்தல் அலு வலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித் துள்ளது. 

No comments:

Post a Comment