புத்தகக் கண்காட்சிக்கு ‘இணைய வழியில் அனுமதி சீட்டு’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

புத்தகக் கண்காட்சிக்கு ‘இணைய வழியில் அனுமதி சீட்டு’

சென்னை, பிப்.6  சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.., உடற்கல்வியியல் மைதானத்தில், வரும், 16ஆம் தேதி முதல், அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடக்க உள்ள, 45ஆவது சென்னை புத்தக கண்காட்சிக்கு, இணைய வழி அனுமதிச்சீட்டு விற்பனை வசதி செய்யப்பட்டு உள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலர் முருகன், துணைத் தலைவர் மயிலை வேலன் ஆகியோர்  அளித்த பேட்டி: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகளால், இந்த மாதம் 16ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு துவங்குகிறது. இதை, முதலமைச்சர் மு.. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

அப்போது, தலா ஆறு பேருக்கு கலைஞர் பொற்கிழி மற்றும்பபாசிவிருதுகளை வழங்க உள்ளார். கரோனா பரவல் காலம் என்பதால், பேரிடர் மேலாண்மைத் துறை, புத்தகக் காட்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றை கடைப்பிடித்து, பிப்., 16 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை, காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை புத்தகக்காட்சி நடத்தப் படும். ஆயிரம் அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 800 அரங்குகளில் மட்டும், காற் றோட்ட வசதிஉடன் புத்தகக் காட்சி நடத்தப்படும். இந்தாண்டு, ஒரு லட்சம் புதிய தலைப்புகளில் புத்த கங்கள் விற்பனைக்கு வர உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீதம் முதல் சலுகை உண்டு. இந்தாண்டு, நிறைய புதிய எழுத்தா ளர்கள் அறிமுகமாகி உள்ளனர்.

நிறைய சரித்திரம், சமூகம் சார்ந்த நாவல்கள், கட்டுரைகள் அதிகம் அச்சாகி உள்ளன. புத்தகக் காட்சியில் சிற்றரங்கம் வசதி செய் யப்பட்டுள்ளது.வாசகர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்கும். மாணவர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டு வழங்கப் படும். மாணவர்களின் திறனை வெளிப் படுத்தும் வகையில், வாசிப்பு சார்ந்த பேச்சுப் போட்டிகள், ஓவியம், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒன்றிய, மாநில குழந் தைகள் பாதுகாப்பு பிரிவின் சார்பில் விளக்கப் படங்கள் வெளியிடப்பட உள்ளன.

நுழைவுச் சீட்டுகள் பெறுவோர் கூட்டம் கூடாமல் இருக்கும் வகையில், ‘இணைய அனுமதி சீட்டு விற்பனை வசதிகள்,www.bapasi.com என்ற இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.’பபாசிபொரு ளாளர் குமரன், இணை செயலர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பி னர்கள் லோகநாதன், பிரபாகரன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment