பேராவூரணி, பிப். 2- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதி அருகே, ஆனந்த வல்லிபுரம் வாய்க்கால் தென்கரையில், பள்ளி வாசல் அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழைநீரை வடிய வைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால், பொதுமக்கள் அவதிப் பட்டு வருகின்றனர்.
இதனால் மறுகரை யில் சுமார் 1 கி.மீ தூரம் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் 15 வருடங் களுக்கு முன்பு அமைக்கப் பட்ட சாலையை சீர மைக்க வேண்டும். இப்பகு தியில் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதே பகுதியில், அங்காடி, மருத்துவமனை உள்ளது. சாலை துண்டிக் கப்பட்டிருப்பதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட னடியாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment