கேள்வி 1: “நீட்” தொடர்பாக தமிழ்நாட்டு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்து நாம் செல்ல வேண்டிய மன்றம் எது?
- சீ.ரகுநாதன், மதுரை
பதில்: சட்டமன்றம் - மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்புதல்.
2. மக்கள் மன்றம் - “நீட்” தேர்வுக்கான ஆதரவை திரட்டிக் காட்டும் பணியை கட்சிகள், இயக்கங்கள் இணைந்து பெருந்திரள் அறப்போராட்டமாக நடத்துவது.
கேள்வி 2: தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ வாராவாரம் “துக்ளக்” ஏட்டால் தங்களைச் சீண்டாமல் இருக்க முடியவில்லையே?
- கோ.செல்வம், சுரண்டை
பதில்: குருமூர்த்தி அய்யர்வாளின் கனவில்கூட ‘வீரமணிதான் மிரட்டுகிறார் போலும்!’ நான் பாதை தவறாமல் செல்லுகிறேன் என்பதற்கு அதுவே சரியான எடுத்துக்காட்டு - சான்றும் கூட!
கேள்வி 3: தாங்கள் தற்போது வாசித்துவரும் புத்தகம் எது தொடர்பானது அய்யா?
- பா.இசைச்செல்வி, சிதம்பரம்
பதில்: ருட்கர் பிரெக்மன் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் - நாகலட்சுமி சண்முகம் அவர்களது “மனிதகுலம் - நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு” (Humankind) என்ற தமிழ்ப் புத்தகம் (ஆங்கிலம் முன்பே படித்ததுதான்)
பிரபல பிளாஸ்டிக் சர்ஜனான டாக்டர் மேக்ஸ்வெல் மால்ட்ஸ் M.D.- F.I.C.S. எழுதியுள்ள ஆங்கில நூல் psycho cybernetics என்ற நூல் (அமெரிக்கப் பேராசிரியர் தோழர் அரசுசெல்லையா அளித்தது) ஆகிய இரண்டுமே தனித்தன்மையான சிந்தனைகளையும் கொண்ட சிறந்த நூல்கள்.
கேள்வி 4: கருநாடக மாநிலத்தில் தண்ணீருக்காக 30 ஆண்டுகள் தனி நபராக விடாமுயற்சி செய்து எட்டு சுரங்கங்கள் தோண்டிய விவசாயி மகாலிங்கம் அவர்கள் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் அல்லவா?
- க. முனியாண்டி, ஆரணி.
பதில்: உண்மையான ‘பாரத ரத்னா’ அவர்தான்! பாராட்ட வார்த்தைகளே இல்லை!
கேள்வி 5: ஆப்கானிஸ்தான் நாட்டில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங்களை விற்கும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதே!
- வே. பெருமாள்சாமி, விழுப்புரம்.
பதில்: மதவெறி, அரசியலை அமைத்தால், அது இப்படிப்பட்ட அலங்கோலமாகத்தான் இருக்கும். மதம் பிடித்தால் மனிதர்கள் படும் பாட்டிற்கு நல்ல எடுத்துக்காட்டு!
கேள்வி 6: கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவரது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காந்தியடிகளின் நினைவு நாளில் உறுதியேற்றிருப்பது சங்கிகளுக்கு ஒருவித கலக்கத்தையும் - அச்சத்தையும் ஏற்படுத்தும் அல்லவா?
- சு. மோகன்ராஜ், தாம்பரம்.
பதில்: அதனால்தான் அவர்களும் - அவர்களின் கொத்தடிமைகளாக தமிழ்நாட்டில் உள்ள சிலரும் உளறிக்கொண்டு திரிகிறார்கள் - வயிற்றெரிச்ச
லுடன்!
கேள்வி 7: “பெரியார் பேருரையாளர்” அய்யா இராமநாதன் அவர்களின் வகுப்பில் தாங்கள் அமர்ந்து கேட்டதுண்டா?
- ப. நாகராஜன், பன்னத்தெரு
பதில்: குற்றாலத்தில் அவர் எடுத்த பயிற்சி வகுப்பில், பின்னால் அமர்ந்து கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அதைவிட மறக்க முடியாத நிகழ்வு - பழத்தோட்டம் என்ற பகுதிக்கு அருவியில் (Falls) குளிக்க நாங்கள் இருவரும் நடந்து செல்லும்போது, புரட்சிக்கவிஞர் எனது திருமணத்தின்போது எழுதி வாசித்த கவிதை பற்றி எனக்கு அவர் விளக்கிச் சொன்னபோதுதான் அப்படி புரட்சிக்கவிஞர் எழுதியது என்மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
திருமணத்தின்போது அப்படி உள்வாங்கவில்லை நான். அது ஓர் அரிய தருணம் அவரிடம் பாடம் கேட்டது!
கேள்வி 8: அண்மைக் காலமாக பா.ஜ.க. விவாதங்களிலும், அறிக்கைகளிலும் மண்டல் குழுவுக்கும், சமூகநீதிக்கும் உரிமை கொண்டாடுகிறதே?
- முகிலா, குரோம்பேட்டை
பதில்: இதுதான் பார்ப்பனியத்தின் தந்திரங்களிலும் கபடவேடங்களிலும் உள்ள முறை! புரிந்து கொள்ள வேண்டும்! “வெற்றிக்கு ஆயிரம் ஹீரோக்கள் வருவர் - தோல்வி எப்போதும் அனாதைதான்” என்பது ஆங்கிலப் பழமொழி!கேள்வி 9: பட்ஜெட்டில் உணவு மானியத்தையும், உர மானியத்தையும் ஒன்றிய அரசு குறைத்துள்ளதே, அது விவசாயிகளை மட்டுமா பாதிக்கப் போகிறது?
- ஆர்.கார்த்திகேயன், செங்கோட்டை
பதில்: அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு சர்சார்ஜ் 12 சதவிகிதத்தையும் 8 ஆகக் குறைத்து. “வாடும் அவர்களுக்கு” வாழ்வளித்துள்ளார்களே!கேள்வி 10: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணி முறிவு?
- கி.வினோத், வீரனூர்
பதில்: தற்காலிக மண விலக்கு - Judicial Separation - இந்துலா படி
No comments:
Post a Comment