ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக-பா.. கூட்டணி உடைந்தது: அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மேற்கு .பி.யில் ஹிந்துத்துவா அரசியலுக்கும், பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கிக்கும் இடையேதான் போட்டி என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

நாடாளுமன்ற துவக்க நாளான நேற்று குடியரசுத் தலைவர் உரையாற்ற துவங்கியபோது, தமிழ் நாட்டைச் சேர்ந்த திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் உறுப் பினர்கள், நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், காலம் தாழ்த்துவது குறித்து குரல் எழுப்பினர்.

தி டெலிகிராப்:

ஆளுநர் ஜெகதீப் தன்கார் நாள்தோறும் எனது அரசுக்கு எதிரான செய்திகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றார். இதனால் நான் அமைதியிழந்தேன். எனவே ஆளுரின் டிவிட்டர் பக்கத்தை நான் பிளாக் செய்து விட்டேன் என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர்ர் மம்தா.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment