கோயில் சொத்துகள் பாதுகாக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம் உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

கோயில் சொத்துகள் பாதுகாக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, பிப். 10- கோவிலையும், அதன் சொத்துக்களையும் பாது காக்க வேண்டிய கடமையை செய் யாமல் முறைகேடுகளுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண் டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப் பூர் கபாலீஸ்வரர் கோவிலின் 24 கிரவுண்ட் நிலத்தை மயிலாப்பூர் கிளப்  குத்தகைக்கு எடுத்து அனுப வித்து வருகிறது.

கடந்த 2007 முதல் மாத வாடகை இரண்டரை லட்சம் என நிர்ணயித்து, ஒவ்வொரு 3 ஆண்டு களுக்கு ஒரு முறையும் ரூ.50 ஆயிரம் கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலை யில், கடந்த 2016இல் சந்தை மதிப் பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் மாதம் நான்கரை லட்சம் செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வா கம் சார்பில் தாக்கீது அனுப்பப்பட் டது. அதன்பேரில் 3 கோடி ரூபாய் அளவிற்கு பாக்கி வைத்திருப்பதாக பலமுறை தாக்கீது அனுப்பப்பட்ட நிலையில், கோவிலின் இணை ஆணையர் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அனுப்பிய தாக்கீதை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப் பித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ர மணியம், கோவில் நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்த கைக்கு விட வேண்டுமெனவும், அதற்கு மேல் நீட்டிக்க உரிய அனு மதி பெற வேண்டுமென அறநிலை யத்துறை சட்டத்தில் குறிப்பிட்டி ருந்தாலும், அதனடிப்படையில் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை அதிகாரிகள் நிர்ண யிக்கவில்லை என குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு கோவிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக் கொண்ட பிறகு, அந்த கோவிலின் நிர்வாகத்தை வெளிப்படைத் தன் மையுடன் கடைப்பிடித்து, கோவி லையும் அதன் சொத்துக்களையும் பாதுக்காக்க வேண்டிய கடமை இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்.

அந்த கடமையை செய்யாமல் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டுமென தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதுபோன்ற செயல் அறநிலை யத்துறை சட்டத்தை மீறுவது மட் டுமல்லாமல், கோவிலுக்கு கொடை யாகக் கொடுத்த நன்கொடையா ளர்களிடம் கொடுத்த உத்தர வாதத்தை மீறும் செயல் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

மயிலாப்பூர் கிளப்புக்கு 2016 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் வாட கையை நிர்ணயித்து, அதன்படி வாடகை மற்றும் பாக்கியை வசூ லிக்கும் வகையில் அனுப்பப்பட்ட தாக்கீது சரியானது என்பதால், அந்த வாடகையை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த தாக்கீதை ரத்து செய்ய மறுத்து, மயிலாப்பூர் கிளப் பின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment