புதுடில்லி, பிப். 28- உக்ரைன் நெருக்கடியால் பெட் ரோல், டீசல் விலை உயர்ந்து, விலைவாசி உய ரும் நிலை உண்டானால், பெரும்பாலான குடும்பங் கள் தேவையில்லாத செல வுகளை குறைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உள்ளூர் சமூகம் சார்ந்த சமூக ஊடக சேவையான ‘லோகல்சர் கிள்ஸ்’ சார்பில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், 42 சதவீதம் பேர், பெட்ரோல் விலை உயர்வின் பாதிப்பை எதிர்கொள்ள தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர். இவர்களில் 24 சதவீதம் பேர் ஏற்கெனவே இத்த கைய சிக்கன நடவடிக் கையை மேற்கொண்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே பெட்ரோல் விலை உயர் வின் உடனடி பாதிப்பை தங்களால் எதிர்கொள்ள முடியும் என கூறியுள்ள னர். நாட்டின் 361 மாவட் டங்களில், 27 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டது. மேலும், இந்த ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு, பன்னாட்டு பதற்றம், ஊதியம் குறைப்பு அல்லது வர்த்தகம் பாதிப்பு உள்ளிட்ட கார ணங்களால் வருமானம் குறைய வாய்ப்பிருப்பதாக கருதுவதாக, பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், 11 சதவீதம் பேர் தங்கள் வருவாய் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment