பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கிரானைட் பாறைகளில் ரேகை, ரேகையாக பல தாதுக்கள் இருப்பதுண்டு. அதில் மைக்காவும் ஒன்று. கிரேனைட் பாறைகளை தூளாக்கி, தூய்மைப்படுத்தி மைக்காவைப் பிரித்து, அயனிப் பரிமாற்றத்திற்குள்ளாக்கி, இறுதியில் லித்தியம் கார்பனேட்டை தனியே எடுக்கும் முறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். கிரானைட் குவாரியிலேயே நிகழ்த்தும் இந்த இரசாயணப் பகுப்பாய்வுக்கு மூன்று தனித்தனி காப்புரிமைகளை பெற பிரிட்டிஷ் லித்தியம் விண்ணப்பித்துள்ளது. இந்த முறை வாயிலாக, தினமும் தற்போது 5 கிலோ லித்தியத்தை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. இன்னும் வேகப்படுத்தினால், ஆண்டுக்கு 21 ஆயிரம் டன்கள் லித்தியம் உற்பத்தி செய்ய அவர்களால் முடியும்.
இன்று தங்கத்தைவிட மிகவும் வேண்டப் படும் உலோகமாக லித்தியம் மாறியிருக்கிறது. காரணம், விரைவில் உலகெங்கும் சாலைகளை ஆக்கிரமிக்கவிருக்கும் மின்சார வாகனங்களுக்கு, அடிப்படையான லித்தியம் அயனி மின்கலன்களில் லித்தியம் பயன்படுகிறது. சிலி, ஆஸ்திரேலியா, சீனா, அர்ஜென்டினா, போன்ற சில நாடுகளில்தான் லித்தியம் சுரங்கங்கள் உள்ளன.
ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் கிரானைட் சுரங்கங்கள் உள்ளன. எனவே, அவை இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக லித்தியம் தயாரிக்கும் நாடுளாக மாற முடியும்.
No comments:
Post a Comment