சீனாவிலுள்ள ஹேபெய் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான குவி ஆடியை வடிவமைத்துள்ளனர்.இது அலைபேசி, ஒளிப்படக்கருவி போன்றவற்றில் பயன்படுத்த ஏற்றது. வழக்கமான கண்ணாடி ஆடிகளைவிட, இலகுவான எடைகொண்டது. ஒரு ஆடிக்குள், டைபியூடைல் அடிபேட் எனப்படும் திரவத்தை நிரப்புவதன் வாயிலாக இந்த புதுமையான குவி ஆடி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரவம் எதிர்மறை மின்னணு மூலக்கூறுகளைக் கொண்டது. இந்த மூலக்கூறுகள், நேர் மின்சாரம் பாய்ச்சினால் விரிவடையும் தன்மை கொண்டவை. எனவே, ஆடியின் குவியத்தை மாற்ற, லேசான மின்சாரம் பாய்ச்சினால் போதும்.
மின்சாரம் பாய்ச்சினால், இமைப்பொழுதில் குவியத்தை மாற்றும் கண்ணாடி பலவகைகளில் சிறந்ததாகவே இருக்கும் என ஒளிப்பட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment