இந்தியாவில் ஒரே நாளில்
1,07,474 பேருக்கு
கரோனா..! 865 பேர் பலி
புதுடில்லி,
பிப்.6 நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.01 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.21 கோடியை தாண்டியது. இன்று (6.2.2022) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக
1,07,474 பேர் பாதித்துள்ளனர்.
* இதன்
மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,21,88,138 ஆக உயர்ந்தது.
* புதிதாக
865 பேர் இறந்துள்ளனர்.
* இதனால்,
நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,01,979 ஆக உயர்ந்தது.
* தொற்றில்
இருந்து ஒரே நாளில் 2,13,246 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால்
குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,61,148 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12,25,011பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*இந்தியாவில்
1,69,46,26,697 பேருக்கு
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 45,10,770 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment