உ.பி. தேர்தலில் பா.ஜ.க.வின் அச்சு முறிந்தால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

உ.பி. தேர்தலில் பா.ஜ.க.வின் அச்சு முறிந்தால்...

2013ஆம் ஆண்டு முசாபர்நகர் கலவரத்தால் முஸ்லிம்கள் மற்றும் ஜாட் சமூகத்தினரிடையே உருவான பிளவு காரணமாக, உத்தரப்பிரதேசத்தில் பா... அதிகப்படியான இடங்களைப் பிடித்தது. ஆனால், இம்முறை வேளாண் சட்டங்களால் அதிருப்தியடைந்த மேற்கு .பி. மக்கள், பா... மீது கடுங் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மேற்கு மாவட்டங்களில் பிப்ரவரி 10, 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ள இடங்களில், பாஜகவினரின் வாகனங் களுக்குக் கருப்பு கொடி காட்டுவது, கல் எறிவது, சேற்றை வீசுவது என பல சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

அதில் ஒன்று, பா...வின் சிவால்காஸ் தொகுதி வேட்பாளர் மணிந்தர்பால் சிங், சூர் கிராமத்தில் பயணித்த போது, அவரைத் தாக்கிய 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 65 பேர் அடையாளம் காணப்படவில்லை. வேட்பாளர் புகாரளிக்காத நிலையில், காவல் துறையினர் சொந்தமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து  மணிந்தர்பால்சிங் கூறுகையில், எனது வாகனத்தை பாலோ செய்து ஏழு வாகனங்கள் வந்து, கல் எறிந்தும் நான் புகாரளிக்கவில்லை. அவர்கள் எனது சொந்த மக்கள். நான் அவர்களை மன்னிக்கிறேன். ஆனால் ஜனநாயக நாட்டில் வாக்கு சேகரிக்க வருபவர்களுக்கெதிராக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றார்.

காவல் துறை கூற்றுப்படி, கல் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சிக் கொடிகளை வைத்திருந்ததாகவும், கிடைக்கும் காட்சிப் பதிவுகள் மூலம் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தனர்.

வரவிருக்கும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மற்றும் ஆர்.எல்.டி. அமைத்துள்ள கூட்டணி மூலம், யாதவர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஜாட்களின் வாக்குகளை ஒன்றாக இணைக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற முசாபர்நகர் கலவரத்தால் முஸ்லிம்கள் மற்றும் ஜாட் சமூகத்தினரிடையே  பிளவை ஏற்படுத்தி அதிகப் படியான இடங்களைப் பிடித்த  பா...மீது இம்முறை வேளாண் சட்டங்களால் அதிருப்தியடைந்த  மக்கள், கடும் கோபத்தில் உள்ளனர். மேற்கு .பி., அரசியலில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்திய ஜாட் சமூகத்தின் வாக்குகளைப் பெற பா... முயன்று வருகிறது. டில்லியில் ஜாட் தலைவர்களை அமித் ஷா சந்தித்து பேசினார். அப்பகுதி முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முன்னதாக, பா...வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் முசாபர் நகரின் கடவு தொகுதி வேட்பாளருமான விக்ரம் சைனி, அவரது தொகுதியில் உள்ள பைன்சி கிராமத்தில் பா...வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அப்போது, அவருக்கெதிராக "அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வந்திருக்கிறீர்கள்" என்று போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

"வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது" 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் முசாபர் நகர் கலவரம் திட்டமிட்ட வகையில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. அதன் பலனைப் பா... அறுவடை செய்து விட்டது. இவ்வாறு தேர்தல் நெருங்க நெருங்க எதை உருவாக்குவார்களோ என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது.

சாமியார் ஆட்சியாயிற்றே! அது எப்படி இருக்கும்? முதலமைச்சர் தாழ்த்தப்பட்டோர் பகுதிக்குச் சென்றால், அதிகாரிகள் முதல் நாளே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சோப்பும், பவுடரும் கொடுக்கிறார்கள் என்றால், இதன் உட் பொருள் என்ன? .பி. சட்டப் பேரவைத் தேர்தல் என்னும் தேரின் அச்சு முறிந்தால் ஒன்றிய பா... அரசின் அஸ்திவாரங்கள் தலை குப்புறக் கவிழும். இதனைத் தானே எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment