குன்னூரில் மீண்டும் பைலட்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

குன்னூரில் மீண்டும் பைலட்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி

குன்னூர், பிப்.7  நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பன்சத்திரம் கிராமத்தில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அதன்பிறகு வெகு நாட்கள் ஹெலிகாப்டர் இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் 5.2.2022 அன்று குன்னூருக்கு வந்தது. 6 முறை வட்டம் அடித்து தரையில் இறக்கி மீண்டும் வானில் ஏற்றப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு விமான ஓட்டிகளுக்கு ஹெலிகாப்டர் இயக்க பயற்சி அளிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

12 ஆண்டுகள் காவலராக பணியாற்றியவர் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆனார்

திருநெல்வேலி, பிப்.7 விடாமுயற்சியால் இலட்சியத்தை அடையலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாகி இருக்கிறார், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய காவலர் அரவிந்த் பெருமாள்.

திருநெல்வேலி டவுன் மலையாளமேடு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பெருமாள்(34). பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கடந்த 2011இல் தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தனது ஓய்வில்லா பணிச் சூழல்களுக்கு இடையேயும் சிறந்த ஆசிரியராக வேண்டும், பொருளாதாரத்தில் முனைவர் பட்ட ஆய்வுமேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சிய தாகத்தை கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

உயர்கல்வி கற்க வாய்ப்பு கேட்டு காவல்துறை உயர் அதிகாரிகளை நாடினார். அவரது முயற்சிக்கும், உத்வேகத்துக்கும் காவல்துறை அதிகாரிகள் தடைபோடவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, ஆய்வை மேற்கொண்டார்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய பொருளாதார ஆய்வை மேற்கொண்டு சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்து தனது மாபெரும் கனவை நனவாக்கியுள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளாக லத்திபிடித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கப் பயன்பட்ட அவரது கை, தற்போது சாக்பீஸ் பிடித்து மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்கிறது.

No comments:

Post a Comment