உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ரசியாவால் தகர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ரசியாவால் தகர்ப்பு!

கீவ், பிப். 28- உக்ரைன் மீதான ரசியாவின் தாக்குதல் தொடர்ந்து வருகி றது. தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டு கள் வெடித்ததாக தகவல் கள் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரசிய படையினர் தீவிரமாக உள்ள னர்.

உக்ரைன்- ரசிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக் ரைனில் உள்ள ரசிய ஆத ரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றிலிருந்து ரசிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக் கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கரோனா தொற்றின் நெருக்கடியான காலங் களில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை எடுத்து சென்ற நம்பிக்கை யின் சின்னமாக பார்க்கப் பட்ட உக்ரைனுக்கு சொந் தமான உலகின் மிகப் பெரிய விமானம்மிரியா”, இந்த விமானம் நடை பெற்று வரும் போரில் கீவ்யேவுக்கு வெளியே ரஷ்ய படையெடுப்பா ளர்களால் அழிக்கப்பட் டது.

இதுகுறித்து உக்ரை னின் வெளியுறவு அமைச் சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில், “ரசியா நமதுமிரியாவை அழித் திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக அய் ரோப்பிய அரசு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடி யாது. நாம் வெல்வோம்என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment