ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை கோல்மால் பட்ஜெட். எளிய மக்களுக்கு எதிரான நிதிநிலை அறிக்கை என தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் காட்டம்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான, மாநில உரிமை யைப் பறிக்கும் நிதிநிலை அறிக்கை என தமிழ் நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விமர்சனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை மாநிலங்களின் களங்களை ஆக்கிரமிக்கிறது. சுகாதாரம், ஊரக வேலை வாய்ப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், பாதுகாப்பு ஆகிய வற்றில் கொள்கை உந்துதல் இல்லாமை ஆகிய வற்றில் அதன் சிக்கல் அரசியல் தெளிவாகத் தெரிகிறது என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஒன்றிய பட்ஜெட்: சாமானியனுக்கு சுழியம் என்கிறார் மம்தா. மாநிலத்தின் மேனாள் நிதியமைச்சர் மித்ரா, இந்த யூனியன் நிதிநிலை அறிக்கையில் நிதி வளர்ச்சிக்கான திசையே இல்லை என்றார்.

தி டெலிகிராப்:

யூனியன் நிதிநிலை அறிக்கை 2022: கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைப்பு. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் தேபமால்யா.

- குடந்தை கருணா 

No comments:

Post a Comment