தினமும் பழச்சாறு அல்லது பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் ஆரஞ்சுப் பழத்தின் உள்ள நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
* ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
* ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
* ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.
* ஆரஞ்சுப் பழத்தில் அதிக அளவு வைட்டமின்-சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
* ஆரஞ்சுப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
* முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
* வாய் துர்நாற்றத்தை அகற்றும். ஈறுகளில் வீக்கம், சொத்தைப் பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
* தூக்கமின்மையால் அவதிப் படுபவர்கள் தூங்குவதற்கு முன்பு
ஆரஞ்சுப் பழச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
No comments:
Post a Comment