புதுடில்லி. பிப்.10 பன்னாட்டு அளவில் விமான நிலை யங்களின் செயல்பாடுகளை கண் காணித்து வரும் IATA அமைப்பு விமான நிறுவனங்களுக்கு இரண்டு எழுத்து குறியீடும் விமான நிலையங்களுக்கு மூன்று எழுத்து குறியீடும் வழங்குகிறது.
இந்த குறியீட்டின் மூலம் எந்த நிறுவனத்தின் விமானம் எந்த விமான நிலையத்திற்கு செல்கிறது என்பதை கண்காணிக்க இந்த குறியீடு உதவுகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா விமான நிலையத்திற்கு GAY என்று மூன்று எழுத்து குறியீடு வழங்கி இருந்தது. GAY என்ற ஆங்கில சொல் ஆண் ஓரின சேர்க்கையாளரை குறிப்பிடுவதால் இந்த குறியீட்டை நீக்கி வேறு குறியீடு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழு கோரிக்கை வைத்துள்ளது.
பிப். 4 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு இந்த குழு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது, மேலும் குறியீடு மாற்றம் குறித்து IATA அமைப்பிடம் வலியுறுத்தவும் வேண்டு கோள் வைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த IATA அமைப்பு, “விமான நிலைய குறியீடு என்பது எந்த வித மாறுதலும் இல்லாமல் நிலையானதாக இருக்கும், கயா விமான நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் இது திடீரென்று சர்ச்சை யாகி இருக்கிறது. போதிய வலுவான காரணங்கள் இன்றி இதனை மாற்ற இய லாது” என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment