புதுடில்லி, பிப்.10- மக்களவை யில் தமிழில் எழுப்பிய கேள் விக்கு ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் இந்தியில் பதில் அளித்த தால் ஆளுங் கட்சி, எதிர்க் கட்சியினரி டையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
நாடாளுமன்ற மக்களவை யில் நேற்று (9.2.2022) கேள்வி நேரத்தின்போது வெளி நாட்டு நேரடி முதலீடு தொடர்பாக ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி தமிழில் ஒரு கேள்வியை எழுப்பினார்.
உடனே ஒன்றிய அமைச் சர் பியூஸ் கோயல் எழுந்து, அந்த கேள்வியின் தொடக்க பகுதியை கேட்கத் தவறிவிட் டதாகவும், எனவே அந்த கேள்வியை மீண்டும் முதலில் இருந்தே கூறுமாறும் வினவி னார்.
இதற்கு பதில் அளித்த கணேசமூர்த்தி எம்.பி., தான் ஆங்கிலத்தில் கேள்வி எழுப் பினால், அமைச்சரும் ஆங்கி லத்தில்தான் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி னார். ஒரு உறுப்பினர் தமி ழில் எழுப்பும் கேள்விக்கு இந்தியில் பதில் அளிப்பதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆனால் உறுப்பினரின் கேள்விக்கு இந்தியில்தான் பதில் அளிப்பேன் என பியூஸ் கோயல் உறுதிபட தெரிவித் தார். இந்தியில் அளிக்கும் பதில், ஹெட்போன் மூலம் வழக்கம்போல் மொழி பெயர்க் கப்படும் எனவும் அவர் கூறி னார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அமைச்சருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முழக்கமெழுப்பினர்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கணேசமூர்த்தி எம்.பி, யின் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்தனர். இத னால் ஆளுங்கட்சி மற்றும் உறுப்பினர்களிடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட் டது. இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.
அப்போது பேசிய பியூஸ் கோயல், அவையில் ஒரு மொழியில் கேட்கப்படும் கேள்விக்கு அந்த மொழியில்தான் பதில் அளிக்க வேண்டும் என ஏதாவது விதி இருக்கிறதா என்ன? என எதிர்க்கேள்வி எழுப்பினார். அத்துடன் நான் இந்தியில் தான் பதில் அளிப்பேன் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
இதற்கு கணேசமூர்த்தி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவைத் தலை வர் ஓம் பிர்லா புன்முறுவ லுடன் அவரிடம், ஹெட் போன் மூலம் பியூஸ்கோய லின் பதிலை கேட்குமாறு பணித்தார். இதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
கடந்தவாரமும் இதே போன்றதொரு பிரச்சினை மக்களவையில் வெடித்தது. தமிழ்நாடு எம்.பி. ஒருவர் தமிழில் எழுப்பிய துணை கேள்விக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதில் அளித்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் கடும் கண்டனம் தெரிவித்தார். இது அவமதிப்பு எனவும் கூறி னார். ஆனால் இதை ஜோதி ராதித்ய சிந்தியா ஏற்கவில்லை . அதே நேரம் மக்களவை தலைவர் ஓம் பிர்லாவும், இந்தியில் பதில் அளிப்பது அவமதிப்பு ஆகாது என கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment