‘திருக்குறளும் - மனுதருமமும்' - கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

‘திருக்குறளும் - மனுதருமமும்' - கருத்தரங்கம்

தூத்துக்குடி, பிப். 1- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பிலானத் திங்கள் தோறும் நடைபெறும் கருத்தரங்கம் 26.1.2022 அன்று காலை 11.30 மணியளவில் தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

உலகத் திருக்குறள் பேரவை யின் தூத்துக்குடி மாவட்டச் செய லாளர்மோ.அன்பழகன் தலைமை வகித்து உரையாற் றினார். கழக மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி முன்னிலை வகித்தார். மாவட் டத்துணைச் செயலாளர் இரா.ஆழ்வார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்புரையாக, ‘திருக்குற ளும், மனுதருமமும்என்ற தலைப்பில் உண்மை வாசகர் வட்டத் தலைவர் மா.பால் ராசேந்திரம் கருத்துரை வழங் கினார். அவர் தம் உரையில், தருமம் என்ற சொல்லுக்கு அறம், நீதி, ஒழுக்கம், நற்செயல், கொடை, தொழில், வேதம் என்னும் பொருளினைத் தமி ழகராதி தருகிறது. இப்பொருள் களில் எதையுமே கொள்ளாத ஒன்றுதான் மனுதருமம். ‘அறம்என்பது மனதில் குற்றமில்லாது இருத்தலே எனும் திருக்குறள் கருத்துக்கு மாறாகம் பரிமேல ழகர், “மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக் கியன ஒழித்தலுமே அறம்என்கிறார்.

மனிதரை நான்கு வருண மாகப் பிரித்துப் பேதம் கூறி, வருணமொன்றுக்குத் தனி விதி வகுத்துச் சொல்லிடும் மனு நூல் விதிப்படி நடப்பது என் பது எந்த அளவு ஆரியச் சூழ்ச் சியாகும்.

பிறப்பொக்கும் என்பது திருக்குறன். மனுவோ பிராம ணனே மேல் வருணத்தான் - பிற வருணத்தினரின் பொருளை எடுத்துக் கொள்ளும் உரிமை கொண்டவன் - அவனே எல் லோராலும் வணங்கத் தக்கவன் என்று மனித குலத்தைப் பேதப்படுத்துகிறது.

கீழ்ப்பிறந்தார் எனக் கூறி னாலும் அவர் கற்றவராய் இருந் தால் அவரை விடப் பெருமை பெற முடியாது கல்லாத மேற் குடியினர் என்பது திருக்குறள். இச்சிறப்புக்குரியை கல்வியைப் பிற வருணத்தாருக்குக் கற்பித் தல் கூடாது என்று பிராமண னுக்குச் சொல்கிறது மனுதரு மம். அந்தக்கல்வியை நாம் பெற்ற வரலாறு என்பது முட் கள் நிறைந்த பாதையில் நடந்து சென்ற வரலாறேயாகும்.

உழவே உலோகர்க்குத் தலை யாய பணி என்கிறது திருக் குறள். உழவை நீசத்தொழில் என்கிறது மனுதருமம். இவ் வாறு பல்வேறு குறள்களுக்கு விளக்கம் தந்து, அதற்கு எதிர் மறையான பாரப்பனர் மட்டுமே உயிர்வாழ வேண்டிப் பெய்யப்பட்டுள்ள மனுதருமக் கருத்துக்களை இக்கால நடை முறைச் சான்றுகளுடன் எடுத் துக் கூறினார்,

இன்றைய அரசி யல் சட்டத்தை எடுத்து விட்டு முழுக்க மனுச் சட்டத்தையே கொண்டுவர ஒன்றிய பா... அரசு முயற்சிக்கிறது அதனை எதிர்கொண்டு நாம் வீழ்த்திடும் பணியில் முன் நிற்போம் என்று கூறி உரையினை நிறைவு செய்தார்.

இறுதியாக, திருவை, சு.திரு மலைக்குமரேசன் நன்றி கூறிட நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கருத்தரங்கில் மற்றும் ஆர்ப் பாட்டத்தில் மண்டலத் தலை வர் சு.காசி, கோவில்பட்டி செ.ஜெயா, பவுன்தாய், திருவை, சொ.பொன்ராஜ், கோ.முரு கன், கரு.மாரியப்பன், .பெரி யார்தாசன், சி.மணிமொழியன், ஆகந்தசாமி, .செல்வராஜ், கவிஞர் கோ.இளமுருகு, சி.முருகராசா, கி.கலைச்செல்வன், இலா.விக்டர், கோ.சொர்ணம், செ.சண்முகம் கோபால்சாமி, கோமதிநாயகம், சு.கோவில் பிள்ளை, மு.இராஜாமணி,

கா. தாமரைச்செல்வன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment