"நீட்" விலக்கு மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

"நீட்" விலக்கு மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, பிப்.4  மருத்துவப் படிப்புக் கான நீட்தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்குஅளிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை ஆளுநர் நேற்று (3.2.2022) திருப்பி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக வளர்ச்சிக்கும், தமிழக அரசுக்கும் தடையாக இருப்பார் என ஏற்கெனவே தெரிவித்தேன்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது கண்டிக்கத் தக்கது. மாநில அரசு சொல்வதை ஒன்றியஅரசுக்கு அனுப்புவது தான் ஆளுநரின் கடமை. இந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளதை மக்கள் ஏற்கமாட் டார்கள். அரியலூர் மாணவி இறப்பில் பாஜக அரசியல் செய்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி யுள்ளது தமிழக மக்களின் உணர்வுக்கு எதிரானது. ஆளுநரின் இந்த அணுகு முறை சமூக நீதி கேட்கும் மக்களை ஆத்திரமூட்டும்.

கூட்டாட்சி கோட் பாட்டை மதித்து நடக்கும் தமிழ்நாடு அரசின் மீது மோதல் போக்கை உரு வாக்கும் ஆளுநரின் அத்துமீறலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு மாணவர்களின் நலனை யும், சமூகநீதிக் கொள்கை நடைமுறை யையும் உறுதி செய்ய தமிழ்நாடு அரசு மீண்டும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): தமிழ் நாடு சட்ட மன்றத்தால் நி¬வேற்றப் பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது அப்பட்டமான ஜனநாயக விரோதம். இதன் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையையும் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை மதிக்கத் தவறியுள்ளார். இதற்காக 5 மாதங்களை அவர் எடுத்துக் கொண்டது ஏன்? தாமதப்படுத்துவதன் மூலம் தனது முடிவை திணிப்பதுதானே?

அதுவும் ஆளுநர் அறிக்கையில் 'மாணவர் நலனுக்கு சட்ட விரோதமாக' உள்ளதாக சொல்லி மசோதாவை திருப்பியனுப்பியிருக்கிறார்.

இந்த ஆண்டின் குரூரமான நகைச் சுவை இது. ஆளு நரின் தவறான இந்தப் போக்கிற்கு எதி ராக நாடாளுமன்றத்

தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப் பினர்கள் முழக்க மிட்டுள்ளனர்.

இந்த முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:  நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை அவமதித்த ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாடு சட்டப் பேரவையையும், தமிழ்நாடு மக்களையும் தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என். ரவி அவமதித்து இருக்கிறார். அவர் இனியும் அந்தப் பதவியில் நீடிப்பது  முறையல்ல. எனவே, ஒன்றிய அரசு அவரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: ஏறத்தாழ 4 மாதங்கள் காலதாமதம் செய்து, மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளு நரின் செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்த ஆளுநர் முயல் கிறாரோ என சந்தேகம் ஏற்படுகிறது. மக்களின் உணர்வுகளுக்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும்,கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்காத ஆளுநரை  ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழ்நாட்டு  மக்களின் ஒட்டுமொத்த கோரிக் கையை நிராகரிப்பதற்கு ஒப்பாகும்.ஆளுநரின் முடிவு ஜன நாயகத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வு களைப் புண்படுத்தும் வகையில் செயல் படும் தமிழ்நாடு ஆளுநர் வி.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப அழைக்க வேண்டும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற் கான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது கெட்ட வாய்ப்பானது. நீட் விலக்கு சட்டம் கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆளுநரின் நிலைப் பாடு சமூகநீதிக்கு எதிரானது.

எனவே, சட்டப்பேரவையை அவசர மாக கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்த மின்றியோ சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்குஅனுப்ப வேண்டும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: நீட் தேர்வு தொடர்பான முடிவால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. நீட் தேர்வு மசோதாவை மீண்டும்ஆளுநருக்கு அனுப்பி, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு ஏற்படுத்த வேண்டும். அல்லது நீட் தேர்வு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவு கிடைக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநிலச் செயலர் முரளி அப்பாஸ்: நீட் மசோ தாவை திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த உணர்வை ஆளுநர் அவ மதித்து விட்டார். ஆளும் கட்சிக்கெ திரான மோதல் போக்கை,மக்களுக்கு எதிரான மோதல் போக்காக மாற்றி தமிழ்நாட்டின் கோபத்துக்கு ஆளுநர் ஆளாக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment