ராமன் தப்பினான் ஜெர்மனிக்கு கடத்த இருந்த ராமர் சிலை மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

ராமன் தப்பினான் ஜெர்மனிக்கு கடத்த இருந்த ராமர் சிலை மீட்பு

சென்னை, பிப். 6- ஜெர்மனிக்கு கடத்துவதற்காக சென்னையில் பதுக்கிவைத்திருந்த ராமர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்ட னர்.

சென்னையில் இருந்து ஜெர் மனிக்கு ராமர் கற்சிலை ஒன்று கடத்தப்பட இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை கூடுதல் தலைமை இயக் குநர் ஜெயந்த் முரளி உத்தரவுப் படி, காவல்துறை ஆணையாளர் தினகரன் நேரடி மேற்பார்வையில்சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சென்னை ஆலந்தூரில் உள்ள SASL என்ற சரக்குக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சோதனையிட்டனர்.

அப்போது, 2 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள பீடத்துடன் கூடிய பழைய ராமர் கற்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனிக்கு கடத்துவதற்காக இந்த சிலையை பதுக்கி வைத்தி ருந்ததும் தெரியவந்தது. சிலையை வைத்திருப்பதற்கான சரியான விளக்கம் எதுவும் அந்த நிறுவ னத்திடம் இல்லை. சிலை தொடர் பாக, சட்டப்படி செல்லத்தக்க ஆவணங்களும் எதுவும் இல்லை.

இதைத் தொடர்ந்து, ராமர் சிலையை சென்னை சிலை கடத் தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ராமர் கற்சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய்க்கு மேல் இருக் கலாம் என்று கருதப்படுகிறது.

இச்சிலையின் பழைய தன்மை குறித்தும், இச்சிலை யாருக்காக அனுப்பப்படுகிறது, இதை அனுப் பியவர்கள் யார் என்பது குறித் தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையி னரின் இந்த சிறப்பான பணியை காவல்துறை தலைமை இயக்கு நர் சைலேந்திரபாபு பாராட்டினார்.

No comments:

Post a Comment