தங்கள் வான்வெளியில் ரசிய விமானங்கள் பறக்க பல்வேறு நாடுகள் தடை
கீவ், பிப். 28- போர் தீவிரம டைந்துள்ள சூழலில் பெலாரஸின் கோமெல் நகரில் ரசியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இத னிடையே, சர்வதேச நீதி மன்றத்தில் ரசியாவுக்கு எதிராக உக்ரைன் அரசு புகார் மனு அளித்துள்ளது.
உக்ரைனின் 2ஆவது மிகப்பெரிய நகரான கார் கிவ்வை கைப்பற்றி விட் டதாக ரசிய ராணுவம் நேற்று (27.2.2022) காலை அறிவித்தது. இதை அந்த பிராந்திய ஆளுநர் அலி யக் சினிகுபோவ் மறுத்து உள்ளார். அவர் கூறும் போது ‘‘ஆரம்பத்தில் ரசி யப் படைகள் முன்னேறி யது உண்மைதான். அவர் களை உக்ரைன் வீரர்க ளும் பொதுமக்களும் விரட் டியடித்து பின்வாங்கச் செய்துள்ளனர். தற்போது கார்கிவ் நகரம் முழுமையாக உக்ரைன் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
ரசிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் அமைதிப் பேச்சுவார்த் தைக்கு வர உக்ரைன் தரப்பு மறுத்துவிட்டது. தற்போது அவர்களே பெலாரஸின் கோமெல் நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று பரிந்துரை செய் துள்ளனர். இதை ரசியா ஏற்றுக் கொண்டுள்ளது.
கோமெல் நகரில் உக் ரைன் தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்த ரசியக் குழு தயாராக உள்ளது.
இந்தக் குழுவுக்கு ரசிய அதிபர் புதினின் பிரதிநிதி விளாடிமிர் மெடின்கி தலைமை ஏற் றுள்ளார். கடந்தமுறை பேச்சுவார்த்தைக்காக போரை தற்காலிகமாக நிறுத்தினோம். இந்த முறை போரை நிறுத்த மாட்டோம். தொடர்ந்து போர் நடைபெறும். பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் தயாராக இல்லை என் றால் அதற்கான விளைவு களை அந்த நாடு சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரசியாவுடன் அமை திப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டிருப்ப தாக உக்ரைன் அதிபர் மாளிகை தெரிவித்துள் ளது. எனினும் எந்த இடத் தில், எப்போது பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.
ரசியாவின் அணு ஆயு தங்களை கையாளும் படை கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்தநாட்டு அதிபர் விளா டிமிர் புதின் உத்தரவிட்டு உள்ளார். இதன்காரண மாகவே உக்ரைன் அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப் புக் கொண்டிருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தெதர் லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா வுக்கு எதிராக உக்ரைன் அரசு தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து உக் ரைன் அதிபர் ஜெலன்கி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘ரசிய ராணுவம் உக் ரைனை ஆக்கிரமித்து இனப் படுகொலையில் ஈடுபட்டு வருகிறது. ரசிய ராணுவ நடவடிக்கைக ளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி யுள்ளோம். அடுத்த வாரம் மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
விமானங்களுக்கு தடை
ஜெர்மனி, பிரான்சு, பிரிட்டன், போலந்து உட்பட பல்வேறு அய் ரோப்பிய நாடுகள் உக் ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றன. அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொரு ளாதார தடைகளையும் விதித்துள்ளன.
இதைத் தொடர்ந்து போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, ருமேனியா, ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, பிரான்சு, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், ஆஸ்திரியா, சுவீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரசிய விமானங்கள் தங்களது வான்பரப்பில் பறக்க தடை விதித்துள்ளன.
No comments:
Post a Comment