பெங்களூரு, பிப்.10 கருநாடகா ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்த கருநாடக உயர் நீதிமன்றம் மாணாக்கர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தது. சட்டம் ஒழுங்கை அனைவரும் ஒழுங்காக பராமரிக் கவும் அறிவுறுத்தி உள்ளது.
கருநாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த6 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஹிஜாப் அணிந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர் கள் முறையிட்டுள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளின் ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள், மாணவிகள் காவித் துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பல கல்லூரிகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அதனால் பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் கருநாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கிருஷ்ணா தீட்சித் ‘நாம் பகுத்தறிவின்படியும், சட்டத்தின்படியும் செல்வோம், உணர்ச்சிகளால் அல்ல. அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியல் சாசனம் எனக்கு பகவத் கீதை போன்றது’ என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் ஒன்று. இது புனித குர்ஆன் வகுத் துள்ள ஒரு முக்கிய மத நடை முறையாகும். அதனால் அதை அணிவதை தடை செய்யக்கூடாது, இதற்கு சான்றாக ஏராளமான தீர்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட் டினார். அத்துடன், நான் ஒரு பிராமணன், என் மகன் பள்ளிக்கு நாமம் அணிந்து செல்கிறான். இது பொதுஒழுங்கை பாதிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப் பியதுடன், ஹிஜாப் அணிந்து வருவதால், அது யாருக்கும் இடை யூறு ஏற்படுத்துவதில்லை என்றும் கூறினார். இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மாணவர்கள் எந்த வகையிலான சீருடைகள் அணிய வேண்டும் என்பது தீர்மானிப்பது கல்லூரி களை பொறுத்தது. இதில் தளர்வு விரும்பும் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக் குழுவை அணுகி தீர்வு காண வேண்டும் என வலியுறுத் தினார்.
அப்போது குறுக்கிட்ட மனு தாரர் வழக்குரைஞர், வகுப்பறை யில், ஹிஜாப் அணிந்த மாணவி களை தனியாக அமரவைப்பது, மதம் சார்ந்த தீண்டாமை என்று விமர்சித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக் குரைஞர், இது ஆட்சேபகரமான கருத்து என விமர்சித்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி,
‘அரசமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். என்று தெரிவித்ததுடன், போராட் டம் நடத்துவது, வீதிக்கு செல்வது, முழக்கம் எழுப்புவது, மாண வர்களைத் தாக்குவது, மாண வர்கள் பிறரைத் தாக்குவது, இவை நல்ல செயல் அல்ல. நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து கொண்டு இருக்கும் போதே, வளாகத்திற்குள்ளேயும் வெளி யேயும் நிறைய கலாட்டாக்கள் நடைபெறுவதாக அரசு தரப்பு வழக்குரைஞர் கூறுகிறார்.
எனவே கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment