'விடுதலை' ஜன.26 நாளிட்ட இதழில் யாரைப்பார்த்து யார் சிரிப்பது?என்ற தலை யங்கத்தின் வாயிலாக நாட்டின் தேசிய சின்னங்கள் ,கட்டடங்கள் இவற்றை அழித்து தன்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை, உரு வாக்கப்பட்டவை மட்டுமே இருக்கவேண்டும் என்கிற குரூர மனப்பான்மையில் பிரதமர் செயல்படுகிறார் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள் .
ஒன்றிய திட்டக்குழு கலைப்பு, ரயில்வே பட்ஜெட் இணைப்பு இவை மோடியின் கைங்கர்யமே !
மோடியின் தன்முனைப்பு இத்தோடு நிறைவடையவில்லை என்பதற்கு இந்திரா காந்தியால் நிறுவப் பட்ட வீரமரணம் அடைந்த போர்வீரர்கள் சுடரை அணைத்தது ஓர் எடுத்துக்காட்டு !
ரூபாய் நோட்டுகள் காங்கிரஸ் ஆட்சியின் எச்சங்கள் என்று அதை புதிதாக அச்சடித்ததன் உள் நோக்கம் இதுதான்!
அலகாபாத் என்ற பெயரை மாற்றினார்கள். பெயரை மாற்றியது நிறைவடையாது என அந்த வங்கியையே வேறொரு வங்கியோடு இணைத்தார்கள்!
நாடாளுமன்ற புதிய கட்டடம், இது மாதிரி யான காங்கிரஸ் தடங்கள் அழித்தொழிப்பு நடவடிக்கைதான்.
- ஜி.அழகிரிசாமி
செம்பனார்கோயில்
No comments:
Post a Comment