டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
சிங்கரேனி நிலக்கரி நிலையத்தை தனியார்மயமாக்கும் மோடி அரசின் முடிவுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்துவோம், டி.ஆர்.எஸ். தலைவர் ஹரிஷ் ராவ் அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
உ.பி. தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக மம்தா பிரச்சாரம். லக்னோ சென்றார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
நாட்டில் நிலவும் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையில் எதுவும் இல்லை என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
அமெரிக்கா கலிபோர்னியா மாநில பல்கலைக் கழ கத்தில் ஜாதி துவேஷம் குற்றம் என அறிவிக்கப்பட்டதற்கு அமெரிக்க ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
தி.மு.க.வின் சமூக நீதி கூட்டமைப்புக்கு இந்தியா முழுவதும் நல்ல வாய்ப்பு உள்ளது என்கிறது தலையங்க செய்தி.
சமூக நீதி கூட்டமைப்பில் காங்கிரஸ், சிபிஅய், சிபிஎம், பிடிபி ஆகிய கட்சிகள் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்தன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதி கண் காணிப்புக் குழு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதை சரிபார்க்க நேரில் சென்று ஆய்வு நடத்திட உள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment