திராவிட இயக்க வரலாற்றில் பட்டுக்கோட்டைக்கு எப்போதும் தனி இடம் உண்டு என்பதையும், அஞ்சா நெஞ்சன் அழகிரி, பட்டுக்கோட்டை இளவரி, சி.என்.விசுவநாதன், இராமசாமி, மாப்பிள்ளையன், அணைக்காடு டேவிஸ், இரத்தினசாமி என இன்னும், ஏராளமான களப்போராளிகள் பட்டுக்கோட்டையில் வாழ்ந்து மறைந்து பட்டுக்கோட்டை பகுத்தறிவுக் கோட்டையாக விளங்கிட பாடுபட்டார்கள் என்பதை 'விடுதலை'யில் தங்களது முழுப் பக்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த வரலாற்றை படிக்கும்போது என்னைப் போன்ற தோழர்கள் அவர்களை போலவே நாமும் பட்டுக்கோட்டையின் இயக்க வளர்ச்சிக்காக கூடுதலாக உழைக்க வேண்டும் என்கிற உற்சாக உணர்வை பெறுகிறோம்.
25 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு பின், நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு சொந்தமான பழைய கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவோடு புது கட்டடம் கட்டப்படும் என்கிற இனிப்பான செய்தி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது, பட்டுக்கோட்டையில் இதன் மூலம் இயக்கம் மேலும் வளர்ச்சி பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொண்டு, தொடர்ந்து போராடி வெற்றியை பெற்றுத்தந்த தங்களுக்கும், வழக்காடிய வழக்குரைஞர்களுக்கும், புதிய கட்டடம் கட்ட தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அவர்களுக்கும், பட்டுக்கோட்டை டி.கே. நடராஜன் அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கழகத் தோழர்களுக்கும் பட்டுக்கோட்டை நகர கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- சிற்பி வை.சேகர்
நகர கழக தலைவர், பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment