நீட் விவகாரம் - தமிழர்களின் வரலாறு குறித்து ஒன்றிய பா.ஜ.க. அரசு அறியாமல் உள்ளது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

நீட் விவகாரம் - தமிழர்களின் வரலாறு குறித்து ஒன்றிய பா.ஜ.க. அரசு அறியாமல் உள்ளது!

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி முழக்கம்

புதுடில்லி, பிப்.3  தமிழ்நாட்டின் நீட் விவகாரம் குறித்தும், தமிழர்களின் வரலாறு குறித்தும் அறியாமல் ஒன்றிய அரசு நடந்து கொள்வ தாகவும் ராகுல் காந்தி,  கூறினார்.

அவரது உரையின் முழு விவரம் வருமாறு:

‘‘அரசமைப்பைச் சட்டத்தை நீங்கள் படித் தீர்களானால், இந்தியா என்பது  யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்றே அழைக்கப்பட்டி ருக்கும், அப்படியென்றால் என்ன? தமிழ் நாட்டில் உள்ள எனது சகோதரர்களுக்கு இருக்கும் அதே உரிமை, மகராட்டிராவில் இருக்கும் எனது சகோதரிக்கும், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள எனது சகோதரனுக்கும், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், ஜம்மு காஷ்மீர், அந்தமான் ஆகியவற்றில் உள்ள எனது சகோதரிக்கும் இருக்கும். அதே உரிமை எல்லோருக்கும் இருக்க வேண்டும்.''

‘‘இது மிகவும் தீவிரமான விஷயம். இந்த தீவிரமான விஷயத்துக்கு பதிலை எதிர்பார்க்கிறேன். நாட்டில் இரு வித பார்வை உள்ளது. ஒன்றுயூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' தொடர்புடையது. அப்படியென்றால் ஒன்றிய அரசும், மாநில அரசும் பேச்சு நடத்துவது, உரையாடுவது என்பதாகும்."

‘‘அப்படியென்றால் தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதரனிடம் சென்று, உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்க, அவர் பதிலுக்கு உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பார். இதற்கு பெயர் கூட்டு. இது ஒன்றும் ராஜ்ஜியம் கிடையாது. இதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எப்போதும், ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் மீது உங்களுடைய ஆளுகையை உங்களால் செலுத்த முடியாது. நீங்கள் எந்தவொரு கற்பனையில் இருந்தாலும் உங்களால் இந்திய மக்கள் மீது எப்போதும் ஒருபோதும் ஆளு கையை செலுத்த முடியாது."

‘‘கடந்த மூன்றாயிரம் ஆண்டுகளில் அப்படி நடந்ததே இல்லை. இந்தியாவை ஆண்ட அசோகர் ஆகட்டும், மவுரியர் ஆகட்டும், குப்தாக்களாகட்டும் - எந்தவொரு ஆளுகை வரலாறையும் பார்த்தால் அந்த ஆளுகை உரையாடல் மற்றும் பேச்சு வார்த்தை மூலமே சாத்தியமாகியிருக்கும் என்பதை அறியலாம்'' என்றார் ராகுல் காந்தி

‘‘இப்போது பிரச்சினையே நீங்கள் குழப்பம் அடைந்திருப்பதுதான். நீங்கள் (ஒன்றிய அரசு) எல்லாம் மொழிகள், கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை புரியாமல் இந்த மக்களை (தமிழ்நாடு) ஒடுக்கலாம் என நினைக்கிறீர்கள். உங்களுக்கு வரலாறு பற்றிய சிந்தனையே இல்லை. நீங்கள் எதை கையாளுகிறீர்கள் என்பதே உங்களுக்குப் புரியவில்லை.''

தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களின் மனங்களில் தமிழ்நாட்டுச் சிந்தனை உள்ளது. தமிழ் மொழி பற்றிய சிந்தனை உள்ளது. பிறகு அவர்களுக்கு இந்தியா பற்றிய சிந்தனையும் உள்ளது. இதில் நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். கேரளா மக்களுக்கும் ஒரு கலாச் சாரம் உண்டு. நானும் கேரளாவில் இருந்து மக்களவைக்கு தேர்வானவன். அதனால் அதை உணர்கிறேன். அவர்களுக்கு என ஒரு அடையாளம், சிந்தனை உண்டு. ராஜஸ்தான் மக்களுக்கும் வரலாறு, அடையாளம், மொழி, வாழ்க்கை முறை உண்டு. இது ஒரு பூங்கொத்து போன்றது. இதுதான் நமது பலம்.''

‘‘தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்றவற்றின் மக்களிடம் இருந்தும் உங்களிடம் இருந்தும் கூட இதை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்றிய அரசு, மாநில கூட்டாட்சியை ஆளும் நடவடிக்கையில் வேறொரு பார்வையை கொண்டிருக்கிறது. ஒரு பிரம்பை கொண்டு மாநிலத்தை ஆளலாம் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. ஆனால், ஒன்றை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு முறை அந்த முயற்சியை செய்தபோதும், அந்த பிரம்பு உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.''

‘‘தேசத்தின் மீதான உங்களுடைய தவ றான பார்வையால், இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டிருக்கிறது என்றுதான் நிச்சய மாகக் கூற வேண்டும். ஒரு பார்வை: மாநி லங்களின் யூனியன், மொழிகளின் யூனியன், கலாச்சாரங்களின் யூனியன் - இந்த பன் முகப்பட்ட பூங்கொத்து போன்ற அமைப்பிடம் உலகின் எந்தவொரு சக்தியாலும் சவால் விட முடியவில்லை.''

‘‘மற்றொரு பார்வை - ஒரு மன்னரின் பார்வை. அந்த பார்வையை காங்கிரஸ் 1947 இல் அகற்றியது. அந்த மன்னரின் சிந்த னையை உடைத்தெறிந்தோம். ஆனால், இப் போது அந்த பார்வை மீண்டும் வந்து விட்டது. ஷா இன் ஷா, மன்னருக்கு எல்லாம் மன்னர் என்ற பார்வை வந்து விட்டது.''

‘‘இந்த தவறான பார்வையால் என்ன நடந்தது தெரியுமா? நமது மக்களுக்கும், மாநிலங்களுக்கும் இடையே நடக்க வேண் டிய அமைப்புமுறையே, நாம் இந்த தேசத்தின் அமைப்பு முறை என்று அழைக்கும் அந்த முறையே தாக்குதலுக்கு உள்ளாகி ஒரே சிந்தனையால் ஆட்பட்டிருக்கிறது. உதாரண மாக, இன்று தமிழ்நாட்டின் சிந்தனையே இந்திய அமைப்பு முறையில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறது.''

‘‘அவர்கள் (தமிழ்நாடு) ஒவ்வொரு முறை யும் உங்களிடம் திரும்பத்திரும்ப வந்து, வந்து நீட் வேண்டாம், நீட் வேண்டாம் என்று கோரினார்கள். நீங்களோ, ‘‘கிடையவே கிடை யாது, இல்லை, இங்கிருந்து வெளியே போங் கள்'' என்று கூறுகிறீர்கள். உங்களுடைய கட்ட மைப்பில் அவர்களின் குரலுக்கு மதிப்பில்லை.''

‘‘பஞ்சாபின் விவசாயிகள் உங்களுடைய சட்டங்கள் எங்களுக்கு ஏற்புடையதில்லை என எழுந்து நின்றனர். உங்களுடைய கட்ட மைப்பில் அவர்களுடைய குரலுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை. இங்கே வெறும் மன்னருக்கு மட்டுமே குரல் உண்டு. உரிமைக் காக போராடிய விவசாயிகளை ஓராண்டுக்கும் மேலாக கரோனா பாதிப்புக்கு மத்தியில் உயிரி ழப்புகளை எதிர்கொண்டபடி வெளியே இருக்க விட்டீர்கள். ஆனால், மன்னர் அதை கண்டு கொள்ளவில்லை," என்று ராகுல் காந்தி பேசினார்.

நான் ஒரு தமிழன்

உரையை முடித்து நாடாளுமன்ற வளா கத்தைவிட்டு வெளியே வரும்போது, தமிழ் நாட்டை அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குநான் ஒரு தமிழன்' என்று பதில் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment