டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
நீட் தேர்வு விலக்கு மசோதாவை சட்டமன்ற தலை வருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியது கேலிக்குரியது மட்டுமல்ல அபாயகரமானது என்கிறது தலையங்க செய்தி.
டில்லி பல்கலைக்கழக துணை வேந்தர், பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டவரான எம்.ஜெகதீஷ் குமார், பல்கலைக் கழக மானியக் குழு தலைவராக நியமனம்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
நீட் தேர்வு விலக்கு குறித்து தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
இந்தியாவை ஹிந்து ராஜ்யமாக மாற்றிட பாஜக முயல்கிறது என நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
யு.ஜி.சி. தலைவராக ஜெகதேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டதற்கு ஜே.என்.யு. மாணவர் மன்றம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு.
நீட் தேர்வு மசோதாவை ஆளு நர் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான மசோதாவை திமுக எம்.பி. வில்சன் முன்வைத்தார்
தி டெலிகிராப்:
அரியானா மாநிலத்தோருக்கு 75 சதவீத வேலை ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது
- குடந்தை கருணா
No comments:
Post a Comment