உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனச் சமூகத்தினரே பாஜக மீதும் குறிப்பாக சாமியார் ஆதித்யநாத் மீதும் சில பல காரணங்களால் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பார்ப்பனர்களை சமாதானப்படுத்தும் நடவடிக் கைகளில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனராம்.
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில நாட்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்
அங்கு தற்போது ஆட்சியில் உள்ள பாஜக எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதனால் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களின் வாக்கு கணிசமாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சாமியார் ஆதித்யநாத் ஆட்சி யில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே பார்ப்பனர்கள் கருதுகின்றனராம். சாமியார் ஆட்சியில் அவர் சார்ந்த சமூகத்தி னருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகப் பரவலா கக் கூறப்படுகிறது. இதனால் அங்குப் பார்ப்பனச் சமூகத்தி னரே பாஜக மீதும், சாமியார் ஆதித்யநாத் மீதும் அதிருப் தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பார்ப்பனர்களைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கவுதம புத்தர் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா, எதிர்க்கட்சிகள் ஜாதி வெறியுடன் செயல்பட்டு வருகின்றன என்று சாடினார்.
மேலும் பிராமணியம் என்பது ஜாதியல்ல என்றும் அது ஒரு உயர்ந்த வாழ்க்கை முறை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் பாஜக எந்தப் பாகுபாடுமின்றி அனை வருக்குமாகப் பாடுபடுகிறது என்றும் கூறினார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,
”உத்தரப்பிரதேச தேர்தலுக்காக நான் மாநிலம் முழுவதும் செல்கிறேன். என்னிடம் பலரும் பிராமணியம் மற்றும் ஜாதிவெறி குறித்த பாஜகவின் நிலைப்பாடு குறித்தே கேள்வி எழுப்புகின்றனர். இது வெறும் பிராமணர் அல்லது குஜ்ஜார் அல்லது ஜாட்களின் அரசு இல்லை.
நமது அமைச்சரவையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது இது அனை வருக்குமான அரசு; ஒவ்வொரு ஜாதிக்கும் அதன் முக்கியத்து வம் உண்டு. அதை நாம் மதிக்க வேண்டும். நான் ஒரு பிராமணன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் கர்வத் தோடு சொல்வேன்; நான் பிராமணன் மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காண்பவரே பிராமணர்கள். நான் தொழில்முறையில் ஒரு ஆசிரியர். முன்பு எல்லாம் பிற மக்கள் நலனுக்காக பணியாற்றுபவர்களை பிராமணர்கள் என்று அழைத்தனர். பிராமணர்களை அனைத்து ஜாதியினரும் கடவுளாகக் கருதுகின்றனர்.
அப்படியானால், இந்த ஜாதி எங்கிருந்து வந்தது? சொல்லப்போனால் பிராமணர் என்பது ஜாதியல்ல, உயர்ந்த வாழ்க்கை வாழ்பவனை பிராமணன் என்பார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை பிராமணர்கள் மற்றவர்களின் நலன் களுக்காகவே வாழ்கின்றனர். வேலை செய்கிறார்கள்” என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் பிப்.10 தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், எப்போதும் பாஜகவுக்கா கவே வாக்களிக்கும் பார்ப்பனர்களின் வாக்கு இந்த முறை யும் சிதறிவிடக் கூடாது என்பதில் பாஜக கவனமாக உள்ளது.
உ.பி.யின் துணை முதல் அமைச்சரின் இந்தப் பேச்சு உணர்த்துவது என்ன?
பிராமணன் என்பவனும் மனிதன்தான் - மற்றவர்களோடு சமமாகப் பழகக் கூடியவன் - வாழக் கூடியவன் என்று சொல்லவில்லை; அது உயர்ந்த வாழ்க்கை முறையாம். என்ன அந்த வாழ்க்கை முறை?
ஜாதி கூடாது என்கிறார்களா? தீண்டாமை கூடாது - நாம் அனைவரும் சகோதரர்கள் என்று கூறுகிறார்களா? அப்படி தான் வாழ்கிறார்களா? யாரை ஏமாற்ற இந்தப் பேச்சு?
சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு - பூனைக் குட்டி வெளியில் வந்தது என்பதுபோல, ஒவ்வொரு ஜாதிக்கும் முக்கியத்துவம் உண்டு, அதனை நாம் மதிக்க வேண்டும். நான் பிராமணன் என்று சொல்லிக் கொள்வதில் கர்வப்படுகிறேன் என்று பேசி இருக்கிறார்.
இதன் பொருள் என்ன? இவர் பிராமணர் என்று கர்வப்பட்டால் மற்றவர்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று துக்கப்பட வேண்டுமா?
உ.பி.யில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை கிளம்பி விட்டது. பார்ப்பனர் அல்லாதார் சிந்திக்க வேண்டிய நேரம் - சிந்திப்பீர்களா?
No comments:
Post a Comment