புதுச்சேரி அரசு தலைமைச் செயலக நிதித்துறை சார்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற அரச அதிகாரி
எஸ்.கிருஷ்ணசாமி அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் எளிமையான முறையில் அவரது இல்லத்தில் வசந்த் நகர், முத்தியால்பேட்டையில் கொண்டாடப்பட்டது. அவரது துணைவியார் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாந்தாதேவி மகன்கள் ஹேமலதா, உமா, மருமகன்கள் பொறியாளர் விஜய், சிவராஜ், பேரன்கள் ஹரிஷ், அரவிந்த், பேத்தி சகானா ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டினார்.
புதுச்சேரி மண்டல கழக செயலாளர் கி.அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், அமைப்பாளர் மு.குப்புசாமி, பொறிஞர் இரா.திருநாவுக்கரசு, கழக தோழர்கள் களஞ்சியம் வெங்கடேசன், சிவராசன் மற்றும் பலர் பயனாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். எஸ்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அனைவரையும் மருமகன்கள் விஜய், சிவராஜ் ஆகியோர் வரவேற்றனர். சாந்தா தேவி கிருஷ்ணசாமி அவர்கள் தேனீர் விருந்தளித்தார். அனைவருக்கும் எஸ்.கிருஷ்ணசாமி நன்றி நவின்றார்.
நன்கொடை
82ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் எஸ்.கிருஷ்ண சாமி அவர்கள் ஓராண்டு விடுதலை சந்தாவை மண்டல கழக செயலாளர் கி.அறிவழகனிடம் அளித்தார் (4.12.2022)
No comments:
Post a Comment