பெண்களை கல்வியிலிருந்து விலக்கி வைக்க பா.ஜ.க. சூழ்ச்சி கருநாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

பெண்களை கல்வியிலிருந்து விலக்கி வைக்க பா.ஜ.க. சூழ்ச்சி கருநாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி சாடல்

பெங்களூரு, பிப்.7- முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கல்விக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கட ந்த சில நாட்களாக அரசியல் நடக் கிறது என கருநாடக  மேனாள்  முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான  எச்.டி.குமார சாமி, முதலமைச்சர் பசவாரஜ் பொம்மையை கடுமையாகசாடியுள்ளார். 

பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி  அளித்த குமாரசாமி, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கல்விக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக அரசியல் நடக்கிறது. 

பேட்டி பதாவோ என்பதற்குப் பதிலாக, பேட்டி  ஹட்டாவோ (பெண் குழந்தை களை ஒதுக்கித் தள்ளுங்கள்) என, பா.,வின் கருத்து மாறியுள்ளது.  வாக்குகள் பெறுவதற்காகவே இந்த நிலைப்பாட்டை பாஜக மேற்கொண்டுள்ளது. 

முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை க்கு அவரது அமைச்சர்கள்  மீதே கட்டுப் பாடு இல்லை. பள்ளி களில் ஹிஜாப் அணிவதில் புதிய விதி முறைகளைப் புகுத்தவேண்டாம். இத்தகைய கெடுபிடிகளால் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் எனத் தெரிவித் துள்ளார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் கீழ் சரிந்தது

புதுடில்லி, பிப்.7  ஒரு மாதத்துக்குப் பின்னர் இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 83,876 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் (100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விகிதம்) 7.25% என்றளவில் உள்ளது.

ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

* இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கரோனா சிகிச்சையில் உள்ளோர் 11,08,938 பேர்.

* அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 7.25% என்றளவில் உள்ளது.

* வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 9.18% என்றளவில் உள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,22,72,014.

* கடந்த 24 மணி நேரத்தில் 1,99,054 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.

* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,06,60,202.

* கடந்த 24 மணி நேரத்தில் 895 பேர் உயிரிழந்தனர்.

* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,02,874.

* இதுவரை நாடு முழுவதும் 169.63% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அன்றாட கரோனா பாதிப்பு குறைந்துவருவதால் டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று (7.2.2022) முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment