கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை
கொச்சி, பிப். 1- கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முகநூல் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
காந்தியார் வகுப்பு வாத பயங்கரவாதத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தினமான இன்று (ஜன. 30). மதக் கலவரங்கள் மற் றும் வெறுப்பு அரசிய லுக்கு எதிராக அமைதி மற்றும் மனிதநேயத்தைப் பாதுகாத்ததற்காக காந்தி தனது சொந்த வாழ்க் கையை விலை கொடுத் தார். இந்த தியாகத் திரு நாளில், அந்த ஆழ்ந்த மனித நேயத்தின் எரியும் நினைவுகளால் நம் இதயங்கள் நிறைந்திருக்க வேண்டும். காந்தியாரின் நினைவுகள் முன்னெப் போதையும் விட மிகவும் பொருத்தமான ஒரு கால கட்டத்தை கடந்து செல் கின்றன.
காந்தியாரை படுகொலை செய்த அதே வகுப்புவாத சித்தாந்தம் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி யுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சீர்குலைக்கும் விதத்தில் எல்லாவிதமான மத வெறிகளும் களமிறங்கு கின்றன. அப்பாவி மக்கள் பலியாகின்றனர். பேதங் கள் அனைத்தையும் தாண்டி மனித நேயத்தை அடிப் படையாக கொண்ட அன்பே மனிதனின் மிகப் பெரிய பலமாக கருதிய உலகம் போற்றும் காந்தி யாரின் நினைவு நாளில் வகுப்புவாதிகள் மகிழ்ச் சியை பகிர்ந்து கொள் ளும் காட்சிகளை கூட பார்க்கும் நிலையில் உள் ளோம்.
இது ஒரு சமூகமாக இந்தியர்கள் எதிர்கொள் ளும் மிகப்பெரிய சவால். வலுவான அரசியல் நம் பிக்கையுடன் அந்த சவாலை நாம் ஏற்க வேண் டும். பல நூற்றாண்டுக ளாக ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைகளாக வாழ்ந்த மக்களை ஒன்றுதிரட்டி, தேசிய இயக்கத்துடன் இணைத்து, சுதந்திரம் அடைய வழிவகுத்த காந் தியாரின் தியாகத்தின் நினைவே அதன் உத்வேக மாகவும் வலிமையாகவும் மாற வேண்டும். தேசிய இயக்கத்தை பிளவுபடுத்தி முடக்கும் வகுப்புவாதி களின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால், இந்தியா மீண்டும் சுதந்திரம் அடைய நீண்ட காலம் எடுத்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நாட் டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மனித நேயத் தையும் சகோதரத்துவத் தையும் நிலைநிறுத்த உறுதிமொழி ஏற்போம். காந்தியாரின் நினைவாக வாழ்த்துகளை தெரிவிப் போம். இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment