மாநிலம் முழுவதும் குடியரசு, சுதந்திர நாள் விழாக்களில் அம்பேத்கரின் படத்தை வைப்பது கட்டாயம்: கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

மாநிலம் முழுவதும் குடியரசு, சுதந்திர நாள் விழாக்களில் அம்பேத்கரின் படத்தை வைப்பது கட்டாயம்: கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடில்லி, பிப்.6 மாநிலம் முழுவதும் குடியரசு மற்றும் சுதந்திர நாள் விழாக்களில் அம் பேத்கரின் படத்தை கட்டாயம் வைக்க வேண்டும் என்று கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தரவிட் டுள்ளார்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர நாளன்று அரசு விழாக் களில் அம்பேத்கரின்  படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதே போல் கடந்த மாதம்(ஜனவரி) 26ஆம் தேதியும் குடியரசு தினத்தன்று நடந்த அரசு நிகழ்ச்சிகளில் அம்பேத்கரின்  படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அதேபோல் ராய்ச்சூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தினம் கொண்டாடப் பட்டது. அப்போது அம்பேத் கரின் படத்தை ஊழியர்கள் வைத்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா, அம்பேத்கரின்  படத்தை அப்புறப்படுத்தினால்தான் தேசிய கொடியை ஏற்றுவேன் என்று விடாப்பிடியாக கூறி னார். அவரது உத்தரவின்பேரில் ஊழியர்கள் அம்பேத்கரின் படத்தை அங்கிருந்து அகற் றினர். அதன்பிறகு நீதிபதி மல்லிகார்ஜுனகவுடா தேசிய கொடியை ஏற்றினார்.

ஆலோசனை கூட்டத்தில் முடிவு

இந்த நிலையில் அம்பேத் கரை அவமதித்த நீதிபதி மல்லி கார்ஜுனகவுடா மீது நடவடிக் கை எடுக்கும்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற பதி வாளர் சிவசங்கர கவுடா   அறிக் கை ஒன்றை வெளியிட்டார். அதில், ராய்ச்சூர் மாவட்ட நீதிமன்றத்தில் குடியரசு தின விழாவில் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் அந்த நீதி மன்றத்தின் நீதிபதி செயல் பட்ட தாக குற்றம் சாட்டப் பட்டது.

நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா மீது நடவடிக்கை எடுக் கும்படி போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வித மாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், இனி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகங் களில் குடியரசு மற்றம் சுதந்திர நாள் விழாக்கள் கொண்டாடும் போது கட் டாயம் அம்பேத்கர்  படத்தை வைத்து மரியாதை செய்ய வேண்டும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment