தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி மற்றும் இணைய வழியில் நாளை முதல் வழக்கு விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி மற்றும் இணைய வழியில் நாளை முதல் வழக்கு விசாரணை

சென்னை, பிப்.6 சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழ்நாடு, புதுச் சேரியில் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும் நாளை (பிப்.7) முதல் நேரடி மற்றும் இணைய வழி என கலப்புமுறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றதலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் 24ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, வழக்குகள் காணொலி காட்சி வாயிலாக இணையவழியில் விசாரிக்கப் பட்டு வந்தன.

தற்போது தளர்வுகள் அறிவிக் கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களிலும் வழக்கம்போல நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியிடம் வழக்குரைஞர்கள் சங்க பிரதிநிதிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவுறுத்தலின்படி பிப்.7ஆம் தேதி (நாளை) முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி மற்றும் இணைய வழிய மூலமாக கலப்பு முறையில் வழக்குகள் விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

வழக்குரைஞர்கள் நேரடியாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் போது கரோனா தடுப்பூசி, முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கண்டி ப்பாக பின்பற்ற வேண்டும்.

வழக்குரைஞர்களின் சேம்பர்களை திறந்து கொள்ளலாம். ஆனால் நூலகங்கள், உணவகங்

களை திறக்க அனுமதி இல்லை என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் உத்தரவிட் டுள்ளார்.

No comments:

Post a Comment