டில்லி பல்கலை. பேராசிரியர் அனில் சட்கோபால்
சென்னை, பிப். 8-- நீட் வேண் டாம் என்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு சட்ட, அரசமைப்பு ரீதியாக உரிமை உண்டு என்று பேராசிரியர் அனில் சட்கோபால் தெரிவித்து உள்ளார்.
டில்லி பல்கலைக்கழ கத்தில் பணி யாற்றியவரும் இந்திய கல்வியாளருமான பேராசிரியர் அனில் சட் கோபால் மேலும் கூறு கையில், நீட் விலக்கு சட்ட விதிமீறலாக இருக் காது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. பல் கலைக்கழகம், உயர்கல்வி ஆகியவை பொதுப் பட் டியலில் மட்டுமின்றி மாநிலப் பட்டியலிலும் உள்ளன. பல்கலைக்கழ கம் தொடங்குதல், மூடு தல், முறைப்படுத்தலுக்கு மட்டும் அரசமைப்புச் சட்டத்தில் உரிமை. மாண வர் சேர்க்கை சார்ந்த முடிவை மாநிலங்கள் எடுக்க உச்சநீதி மன்றம் உரிமை வழங்கியிருக்கி றது. ஒன்றிய, மாநில அரசின் சட்டங்களுக்கு இடையே முரண் இருந் தால், குடியரசுத் தலைவ ரின் ஒப்புதல் தேவை. குடியரசுத் தலைவர் ஒப் புதல் அளித்தால் மாநில அரசு சட்டத்தை அமல் படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment