கோட்சே பெயரைச் சொல்லக்கூடாதா? காவல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

கோட்சே பெயரைச் சொல்லக்கூடாதா? காவல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

 தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, பிப்.1 காந்தியாரைக் கொன்றது கோட்சே என்றோ, ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள், இந்து மதவெறியர்கள் என்றோ கூறக் கூடாதென கோவையைச் சார்ந்த காவல் துணைக் கண் காணிப்பாளரும், வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்கு வாதம் செய்த நிகழ்வு அதிர்ச்சியை அளிப்பதாக விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

"காந்தியார் நினைவுநாளை யொட்டி கோவையில் 'மக்கள் ஒற்றுமை மேடை' என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதி ராக உறுதிமொழி ஏற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒருவ ரான ஜி.இராமகிருஷ்ணன் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர். காந்தி யாரைக் கொன்றது கோட்சே என்றோ ஆர்.எஸ்.எஸ். பயங்கர வாதிகள், இந்து மதவெறியர்கள் என்றோ கூறக் கூடாதென அப் பகுதியைச் சார்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும் வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

காவல் துறையினர் அவ்வாறு நடந்துகொண்டது ஏனென்று விளங்கவில்லை. காந்தியாரைக் சுட்டுக் கொன்றது மதவெறி பயங் கரவாதி நாதுராம் கோட்சே தான் என்பதும், அவன் அதற்காக மரணத் தண்டணைக்குள்ளானான் என்பதும் வரலாற்று உண்மை. இந்த வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி? ஏன் கோட்சே பெயரைச் சொல்லக் கூடாது என தடுத்தார்? காந்தி யாரைக் கோட்சே கொல்லவில்லை என்று நம்புகிறாரா? அல்லது காந்தியார் கொல்லப்படவே இல்லை; வேறு காரணங்களால் இறந்தார் என கருதுகிறாரா? அல்லது அவர் காந்தியாரைக் கொன்றது சரி என்று கோட் சேவைக் கொண்டாடும் கும்பலில் ஒருவரா? அவரும் அவரோடு வந்த அதிகாரிகளும் நடந்துகொண்ட போக்குகள் மற்றும் அணுகு முறைகள் வன்மையான கண்டனத் துக்குரியது.

சமூகநீதி அரசின் கீழ் பணி யாற்றும் காவல்துறையினர், மதவெறிபிடித்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களைப்போல நடந் திருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டம் - ஒழுங் கைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் மதம் சார்ந்து செயல்படும் காவல்துறையினரின் இந்தப் போக்குக் கருத்துரிமையைப் பறிக் கும் சனநாயக விரோத அடா வடிப்போக்கு மட்டுமின்றி, மத வாத நடவடிக்கையுமாகும். எனவே, மதச் சார்பின்மைக்கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதி காரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment