தோல்வி என்பது தந்தை பெரியாருடைய போராட்ட அகராதியிலேயே கிடையாது!
‘‘ஆணவக்
கொலைகளும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்’’
காணொலி
சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
சென்னை,
பிப். 6 ‘‘நான் எப்பொழுதும் தோற்றுப் போக மாட்டேன்; என்னுடைய வெற்றி வேண்டுமானால், சற்று தாமதமாக வரலாம்'' என்றார் தந்தை பெரியார். தோல்வி என்பது தந்தை பெரியாருடைய போராட்ட அகராதி யிலேயே கிடையாது என்று
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
விளக்கவுரையாற்றினார்.
‘‘ஆணவக்
கொலைகளும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்!’’
கடந்த
4.12.2021 அன்று
மாலை ‘‘ஆணவக்
கொலை களும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்‘‘ எனும் தலைப்பில் காணொலிமூலம் நடைபெற்ற கூட்டத்தில்,
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
அவரது
சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
“These episodes of caste-motivated violence in the country demonstrate the fact that casteism has not been annihilated even after 75 years of Independence. According to Dr B.R.Ambedkar, inter-caste marriage is one remedy to get rid of casteism in order to achieve equality. His vision for ensuring justice and equality to all sections of the society, especially to the repressed segments, is well enshrined in the preamble of the Constitution. The bigotry perpetuated by such caste-based practices which are prevalent even today, impedes this objective of the Constitution of equality for all its citizens,” the Bench said.
இதன்
தமிழாக்கம் வருமாறு:
நாடு
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் ஜாதி
இங்கு ஒழியவில்லை என்பதையே தற்போது நடக்கும் ஜாதிய மோதல்கள் மற்றும் ஜாதிவெறி நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கரின் கூற்றுப்படி, சமத் துவத்தை அடைவதற்காக, ஜாதிவெறியை ஒழிப்பதற் கான ஒரு தீர்வு ஜாதி மறுப்புத் திருமணம் ஆகும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான அவரது பார்வை, அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் நன்கு பொதிந்துள்ளது. இன்றும் நடைமுறையில் இருக்கும் ஜாதி அடிப்படையிலான நடைமுறைகளால் தூண்டப்படும் மதவெறி, குடிமக்கள்
அனைவரும் சமம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தைத் தடுக்கிறது என்று நீதிமன்ற அமர்வு கூறியது.
இதைத்தானே
அதே நாளில் நாம் பேசினோம். நன்றாக நீங்கள் எண்ணிப்பாருங்கள். திராவிடர் கழகத் தினுடைய பணி என்பது, ஊடகங்களால் இருட்டடிக்கப் படலாம். இன எதிரிகளால் திசை
திருப்பப்படலாம்.
ஆனால்,
இவ்வளவையும் தாண்டி, காற்றை விதைத்து புயலை அறுவடை செய்வதைப்போல, இன் றைக்கு அவர்கள் எவ்வளவுதான் திசை திருப்பினாலும் முடியவில்லை.
இன்றைக்கு
உச்சநீதிமன்றத்தினுடைய
தீர்ப்புகள் - அதுவும் உயர்ஜாதியாக இருக்கக்கூடியவர்கள் நீதிபதி யாக அமர்ந்திருந்த சூழலில்கூட, அவர்களுடைய பேனாவில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் ஜாதிக் கேடுகளை சாடுவனவாக இருக்கின்றன.
ஏனென்றால்,
இது ஒரு சரித்திர கட்டாயம். விஞ்ஞானபூர்வமான உண்மை.
உலகம்
உருண்டை என்று சொன்ன கலிலியோவை சிறையில் போட்டால் மட்டும், உலகம் தட்டையாகி விடுமா? உலகம் உருண்டைதான். எத்தனை ஆண்டு களானாலும் அது நிரூபிக்கப்பட்டது.
ஒரு
காலத்தில் ‘செவ்வாய் தோஷம்‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் கண் முன்பாகவே, செவ்வாய்க் கிரகத்தில் இறங்குகிறார்கள் என்றாலும், இன்னமும் கூட அவர்களுக்குப் புத்தி வரவில்லையே!
1957 ஆம்
ஆண்டு அரசமைப்புச் சட்ட நகலை எரித்தார் தந்தை பெரியார்!
அப்படிப்பட்ட சூழ்நிலையில்,
1957 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்ட நகலை எரித்தார் தந்தை பெரியார். சட்டத்தை எரிப்பது என்பதே ஒன்றைச் சுட்டிக்காட்டு வதற்காகத்தான். எந்த நோக்கத்திற்காக அதனைச் செய் கிறோம்? அந்த நோக்கத்தை, அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்டோம்; நிர்வாகத்தைப் பார்த்துக் கேட்டோம்.
நீதிமன்றங்கள்
இப்பொழுது சுட்டிக்காட்டுகின்றன - அரசாங்கத்தைப் பார்த்து.
எதை
திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும் சுட்டிக்காட்டி - மாநாடுகளில் தீர்மானங்களாக நிறை வேற்றினோமோ - போராட்டங்களை
நடத்தி முடிவாகச் சொன்னோமோ - அதையே இன்றைக்கு நீதிமன்றங்கள், அரசாங்கத்திற்கு, ஆளுமைக்கு, ஆட்சிக்கு, நிர்வாகத் திற்குச் சுட்டிக்காட்டுகின்றன.
இளைஞர்கள்
இந்த இயக்கத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும்; இந்த வாய்ப்பைப்பற்றி நாம் வேகமாக ஜாதி ஒழிப்புக்கான பணிகளில் அடுத்தடுத்த பணிகளை முன்னெடுக்கவேண்டும்.
சட்டம் நொண்டியடித்துக்கொண்டு பின்னாலே தானே வரும்!
அடிக்கடி
சொல்லக்கூடிய ஒரு ஆங்கிலப் பழமொழி இது -
“பொது
ஜனக் கருத்தை நாம் உருவாக்கிக் கொண்டே போவோமேயானால், சட்டம் நொண்டியடித்துக்கொண்டு பின்னாலே தானே வரும்?”
இதில்
நமக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. பெரியார் அவர்களுடைய முதல் அறப் போராட்டம் - முதல் கிளர்ச்சி - அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு ஆவன செய்ததுதானே இன்றைக்கு அடிப்படையானது. அதுதானே இட ஒதுக்கீடு.
அந்த
இட ஒதுக்கீடுக்கு அவர்கள் அஸ்திவாரம் போட்டதினுடைய விளைவுதானே - அதன்மேல் எழுப்பப்பட்ட மாளிகை 69 சதவிகித இட ஒதுக்கீடு.
தோல்வி என்பது தந்தை பெரியாருடைய அகராதியிலேயே கிடையாது!
ஆகவே
நண்பர்களே, தோல்வி என்பது தந்தை பெரியாருடைய போராட்ட அகராதி யிலேயே கிடையாது.
அவர்
சொன்னார், ‘‘நான் எப்பொழுதும் தோற்றுப் போகமாட்டேன்; என்னுடைய வெற்றி வேண்டுமானால், சற்று தாமதமாக வரலாம்.'' இதுதான் விஞ்ஞானபூர்வமான உண்மை.
அந்த
அடிப்படையிலே, 75 ஆம் ஆண்டு சுதந்திர நாளைக் கொண்டாடி என்ன பயன்? மனிதர்கள் இங்கே சமத்துவமாக இருக்கிறார்களா?
உலகத்தில்
மனிதன் பிறக்கிறான்; இங்கே மட்டும் ஒருவன் பிராமணனாகப் பிறக்கிறான்; ஒருவன் சூத்திர னாகப் பிறக்கிறான்; ஒருவன் பஞ்சமனாகப் பிறக்கிறான்; ஒருவன் மேல்ஜாதிக்காரனாகப் பிறக்கிறான்; இன்னமும் பெண்கள் அடிமைகளாகப் பிறக்கிறார்கள்; தொடக் கூடாதவர்களாக இருக்கிறார்கள்; இன்னமும் அவர்கள் தன்னுடைய ஜாதியைவிட்டு, இன்னொரு ஜாதியில் திருமணம் செய்துகொண்டால், உயிரோடு எரிக்கப்படக் கூடியவர்களாகிறார்கள். அல்லது கூலிப் படையினரை வைத்துக் கொல்லப்பட வேண்டியவர்களாகிறார்கள்.
இதை
நியாயப்படுத்திப் பேசக்கூடிய தலைவர்களும், இயக்கங்களும், கட்சிகளும் இருக்கின்றன என்பது வெட்கக்கேடான
நிலையல்லவா? அதை எதிர்த்துப் போராட வேண்டாமா?
குற்றச்சட்டம்
என்ன சொல்லுகிறது?
குற்றச்சட்டத்தில்,
குற்றம்
புரிபவனைவிட, குற்றம் புரிவதற்கு யார் துணையாகவும், தூண்டுகோலாகவும், அந்தக் குற்றத்தை நடத்தியவனைப் பாதுகாப்பவனாக இருக்கிறானோ, அவன்
ஆபத்தானவன், அவன் மிகப்பெரிய குற்றவாளி. அதுதானே குற்றச்சட்டம்.
அந்தக்
குற்றச்சட்டத்தினுடைய
நியாயத்தின் அடிப்படை அதுதானே. அதையும் இன்றைக்கு மக்கள் மத்தியில் விளக்கவேண்டியது நம்முடைய கடமை.
விஞ்ஞானம்
வெற்றி பெற்றே தீரும்!
நாம்
எதைக் கேட்டோமோ, அது இன்றைக்கு நீதிமன்றங்களில் எதிரொலிக்கின்றது. எதிரொலிக்கத்தான் செய்யும்; ஏனென்றால், விஞ்ஞானம் தோற்காது. விஞ்ஞானம் வெற்றி பெற்றே தீரும்.
மூடநம்பிக்கைகளும்,
காட்டுமிராண்டித்தனங்களும்
தானே விலகியாக வேண்டும்
சூரிய
வெளிச்சம்பட்டால் எப்படி பனி விலகுமோ - அதேபோலத்தான், பகவலனுடைய வெளிச்சம் வரு கின்ற நேரத்தில், அறிவுப் பாய்ச்சல் வருகின்ற நேரத்தில், மூடநம்பிக்கைகளும், காட்டுமிராண்டித்தனங்களும் தானாக விலகிச் சென்றுவிடும்.
அம்பேத்கர்
அவர்களுடைய கருத்துப்படி, ஜாதியை ஒழிக்க தீர்வு என்னவென்றால், ஜாதி மறுப்புத் திருமணம் - கலப்புத் திருமணங்கள்தான்.
அரசமைப்புச்
சட்டப் பீடிகையில், மிகத் தெளிவாக,
இவை
அத்தனையும் இந்தப் பகுதியில் இடம் பெற்றதற்குக் காரணம் என்னவென்றால், புத்தருடைய கொள்கைகள்; சமத்துவம்; பகுத்தறிவுக் கருத்துகள்.
ஜாதிக்குப்
பாதுகாப்பு தெரிந்தோ தெரியாமலோ நுழைக்கப்பட்டு இருக்கிறது அரசமைப்புச் சட்டத்தில்!
இதற்கு
நேர் விரோதமாக உள்ளே - 18 இடங்களில் ஜாதி வருகிறது - ஜாதிக்குப் பாதுகாப்பு தெரிந்தோ தெரியாமலோ நுழைக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அதை நீக்குங்கள் என்று சொல்வது எந்த வகையில் தவறு?
இதைத்தானே
நாளைக்கு நாம் செய்யவேண்டும். இந்தப் போராட்டம் நியாயமான போராட்டம் அல்லவா!
அதுவும்
ஆணவக் கொலைகள் - இந்த நிகழ்ச்சி களைச் சொல்லும்பொழுது உச்சநீதிமன்றம் உங்களுக்கு வாய்ப்புகளைக் கொடுக்கிறது - கதவைத் திறந்து காட்டுங்கள்.
சட்டங்கள்
செல்லாது என்று சொல்லவேண்டியவர்கள் - உரிய சட்டங்களை இயற்றுங்கள் என்று சொல்லுகிறார் கள் - அதனை
ஆதரியுங்கள் என்று சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல,
இன்னும் அழகாகத் தெளிவாக சொல்கிறார்கள்.
“Noting that a marriage proposal by Roshni belonging to Jat community, with Vijendra - a Jatav - resulted in their deaths, the top court said, “Though the number is a tad less, honour killings have not stopped in this country and it is high time that the civil society reacts and responds with strong disapproval about the ghastly crimes committed in the name of caste”.
இதன்
தமிழாக்கம் வருமாறு:
ஜாட் சமூகத்தைச் சேர்ந்த விஜேந்திரா ஜாதவ் - ரோஷ்னியின் திருமணம் கொலையில் முடிந்தது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், “ இந்த நாட்டில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது, ஜாதி யின் பெயரால் இழைக்கப்படும் கொடூரமான குற்றங் களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் பொறுப்பேற்கவேண்டும்‘‘
என்றது.
இந்த
இயக்கம் வலிமையோடும், பொலிவோடும் செய்துகொண்டிருக்கிறது!
அந்த
சமூகத்தை செயல்பட வைக்கவேண்டிய வேலையைத்தான் தோழர்களே, பெரியார் தொண் டர்கள் செய்கிறார்கள். அதைத்தான், 64 ஆண்டு களுக்கு முன்பாக, பெரியார் அரசமைப்புச் சட்டத்தை எரித்து சுட்டிக்காட்டிச் சொன்னார். அதைத்தான் அவருக்குப் பின்பும் இந்த இயக்கம் வலிமையோடும், பொலிவோடும் செய்துகொண் டிருக்கிறது.
This Court issued several directions to the administrative authorities and police officials to take strong mesures to prevent honour killings pursuant to the degree of Khap Panchayats strongly criticized by
ஏற்கெனவே Arumugam Vs State of Tamilnadu வழக்கு - மூன்று வழக்குகளில் நண்பர்களே இதை சொல்லியிருக்கிறார்கள்.
ஜாதி
ஒழிப்பு என்பது
அதன்
லட்சியங்களில் ஒன்றாகும்!
இதில்
மிக முக்கியமான அடிப்படையை சொல்லவேண்டும். அதை விளக்கி ஒரு பெரிய இயக்கம் நடத்தவேண்டும் - நல்ல வாய்ப்பாக தமிழ்நாட்டில் நம்முடைய விடியல் முதலமைச்சராக இருக்கக்கூடிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்
அவர்களின் பொற்கால ஆட்சி நடக்கிறது இப்பொழுது. இந்த ஆட்சியில் ஜாதி ஒழிப்பு என்பது அதன் லட்சியங்களில் ஒன்றாகும்.
கடந்த
10 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த ஆட்சி அதனை அலட்சியப்படுத்தி வந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் உள்பட என்னென்ன செய்யவேண்டும் என்று பழைய தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறது. அதற்காகத்தான் இந்த சிறப்புக் கூட்டமே! இந்த சிறப்புக் கூட்டத்தின் அம்சங்கள் - வழக்கைப்பற்றியெல்லாம் அவர்கள் சொன்னார்கள். அந்தப்
பின்னணியோடு இப்பொழுது தத்துவத்திற்கு, நடைமுறைக்கு வாருங்கள். என்னுடைய பணி அதை விளக்குவதுதான்.
கடந்த
10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மூன்று, நான்கு வழக்குகள் எல்லாவற்றிலும் இது சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது.
ஆறுமுகம்
வழக்கு 2011 இல் வந்தது. அந்த வழக்கில் தீர்ப்புக் கொடுத்தது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி யான் சுதா மிஸ்ரா ஆகியோர் இரண்டு தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஒன்று,
இன்னொன்று, Latha singh Vs State of Tamilnadu என்பது.
ஆகவே,
வரிசையாக சொல்லவேண்டுமானால், அதற்குப் பிறகு வந்த தீர்ப்புகளையெல்லாம் எடுத்து சுட்டிக்காட்டினார்கள்.
ஜாதியை
ஒழிக்கவேண்டும் - காட்டுமிராண்டித்தனம் என்கிற வார்த்தையை தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் தீர்ப்பில் கடுமையாகச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்
பெரியார்
அய்யா அவர்கள் கூட்டத்தில் எவ்வளவு கடுமையாக சொல்வார்களோ, அந்த அளவிற்குக் கடு மையாக நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இளைஞர்கள்
இதை முன்னெடுத்துச் செல்லவேண் டிய பிரச்சாரத்தினுடைய அடித்தளம் - கருவிகள்.
பாபா
சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகாக சொன்னார்கள்,
ஜாதியை
ஒழிக்கவேண்டும் என்று முடிவு செய்தால் மட்டும் போதாது; விரும்பினால் மட்டும் போதாது. அதற் குரிய கருவிகள் என்னென்ன? எத்தகைய கருவிகளை எடுக்கவேண்டும்?
அம்பேத்கர்
அவர்களுடைய வாழ்க்கை முடிந்திருந் தால்கூட, தந்தை பெரியார் அவர்கள் அதனைத் தொடர்ந்தார்.
அய்யா
அவர்கள், நோய்நாடி நோய் முதல் நாடக் கூடியவர். எங்கெங்கெல்லாம் ஜாதிக்கு வேர் இருக் கிறதோ, அந்த வேரை வெட்டினால் ஒழிய, ஜாதி என்ற விஷ விருட்சத்தை வீழ்த்த முடியாது.
அந்த
மன நோய்க் கிருமிகள் வேறு ரூபங்களில் வரும். இப்பொழுது கரோனா முதன்முதலில் ஒரு ரூபத்தில் வந்தது; இன்றைக்கு இன்னொரு ரூபத்தில் வருகிறது அல்லவா! முதலில் வந்ததைவிட அடுத்ததாக வந்தது அச்சப்பட வைக்கிறதல்லவா!
நோய்நாடி
நோய் முதல்நாடுதல்
ஆகவேதான்,
கிருமிகளை அழிக்கவேண்டும். அப்பொழுதுதான் நோய் முற்றிலுமாக ஒழியும். அதுதான் நோய்நாடி நோய் முதல் நாடுதல் என்பதினுடைய தத்துவம் அதுதான்.
இப்பொழுது
நல்வாய்ப்பு என்னவென்றால், இந்தத் தீர்ப்புகளினுடைய தத்துவத்தை, நாட்டில் இவர்கள் மட்டும் சொல்வில்லை.
சட்டம்
இயற்றக்கூடிய அமைப்புகள் மூன்றுதான்.
(தொடரும்)
No comments:
Post a Comment