இந்திய குடியரசு நாள் வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்த கருத்துகள் பற்றி, 'ஊன்றிப் படித்து உண்மையை உணர்க' என்ற ஆசிரியர் அவர்களின் அறிக்கை சாலச் சிறந்தது.
சுதந்திர போரில் ஈடுபட்ட தமிழ்நாட்டின் தலை வர்கள் ஒன்றிய அரசால் மறைக்கப்பட்டு - தமிழர் களின் தியாகத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.இங்கு ஆளுநர் வாழ்த்து செய்தி என்ற பெயரில் ஆன்மிக உரை - மதவெறியை வளர்க்க முயற்சி செய்கிறது பாஜக அரசு. தேசப்பற்று, மொழிப்பற்று இவற்றை களைந்து மதப்பற்று (மதவெறி) வளர்ப்பதையே குறிக்கோளாக எண்ணி செயல்படுகிறது பாஜக.
மொழிக்காக களம் கண்டு, உயிர்துறந்த தமிழ் மண்ணில், இனத்தை காக்க போராடி, சமூகநீதியை விதைத்து பற்றிக்கொண்டு காக்கும் தமிழ்நாட்டில் மதவெறியை திணிக்க பாஜக அரசு படாத பாடுபடுகிறது.
கைபர், போலன் கணவாய் வழியாக வந்தது போல், தமிழ்நாட்டில் மதவெறியை வளர்த்து கால் ஊன்றிவிடலாம் என நப்பாசை கொண்டு அலைகிறது பாஜக. மொழி உணர்வால் எழுச்சிபெற்ற தமிழ் நாட்டில் பாஜக வின் செயல் ஒருபோதும் எடுபடாது. மொழி, இனம், சமூகநீதி இவைகளை காக்கப் போராடிய வரலாறு பா.ஜ.க. வகையறாக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் இடையூறின்றி நுழைந்து விடலாம் என பகல் கனவு காண்கிறது.
மிதிவண்டி நிலையம், சிகையலங்கார நிலையம், பள்ளி, கல்லூரி வாயில் என மக்களிடையே எழுச் சியை விதைத்தது திராவிட இயக்கம். எண்ணற்ற படிப்பகங்கள் அமைத்து அறிவுப் புரட்சியை வளர்த்தது. திராவிட தலைவர்கள் ஏடுகள், நூல்களின் மூலம் விழிப்புணர்வை உருவாக்கினர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் மொழி உணர்வை ஊட்டியதோடு, வழிகாட் டியாக திகழ்கிறது. சமூகநீதி களத்திலும் அவ்வாறே இன்று வரை முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.
உலகிலேயே நாடு என்ற பெயரில் மாநிலம் உள்ளது 'தமிழ்நாடு' மட்டுமே. தமிழ்நாடு என்பது கற்றுக் கொடுப்பது மட்டுமே, நாடு அதை நாடு (பின்பற்று) என்பதே தமிழ்நாட்டின் தத்துவம்.
இனம், மொழி, சமூகநீதி, மக்கள் உரிமை இவை களை காப்பதே தமிழ் மண்ணின் கடமை. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி வகையறாக்கள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.
கற்றுக்கொடுத்த திராவிட இனத்திற்கு பா.ஜ.க. வகையறாக்கள் (மதவெறி) கற்றுக்கொடுக்க நினைப்பது தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். சிந்தனையை விதைத்து பகுத்தறிவை வளர்த்து, சமூகநீதி காக்கும் தமிழ் நாட்டின் மீது பாஜக அரசு மதவாத கண்ணோட்டத் தோடு மட்டுமே செயல்பட்டால் இழப்பு அவர் களுக்குத் தான். விழிப்புடன் இருப்பான் தமிழன். எழுச்சியோடு என்றும் இருப்பான். ஓரவஞ்சனை யோடு பாஜக அரசு செயல்படாமல் ஒருமைப்பாடு போற்றிக் காப்பது தான் மக்களுக்கான ஆட்சி.
தமிழ்நாட்டின்மீது பாஜக, மதவாதம் என்ற வாலை ஆட்டாமல் இருப்பது நல்லது.
- மு.சு.அன்புமணி, மதுரை - 625020
No comments:
Post a Comment